ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல்
"ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது; ரூ.1,488,50 கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார்.
வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சீமான் ஆஜராவதைய...
Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'ஸ்வீட்ஹார்ட் ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இ...
லைக்கா புரொடக்ஷன்ஸ் - ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான' L2 : எம்புரான் ' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' L 2: எம்புரான்' எனும் திரைப்படத்தில்
'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்றும் 'ஜான் விக் சாப்டர் 3 ' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'L 2 எம்புரான் ' எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமா...
ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!
இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது !!
ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்' ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!
ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை உருவாக்குவதில் மாப் சீன் கடந்த இருபது ஆண்டுகளாக முன்னணி சக்தியாக இருந்...
*தமிழ் திரையுலகில் முதல்முறை.. வேற லெவல் அனுபவம் கொடுக்கும் மர்மர் டிரெய்லர்*
*நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன் - மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்*
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழ...
வெளியானது ' ஹரி ஹர வீர மல்லு ' படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் !
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.
அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் அழகு பாடலுக்கு மேலும் புத்துணர்வு சேர்க்கிறது. அத்துடன் அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பு.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ர...
ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்' என்கிறார் அப்புக்குட்டி!
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்'
முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, 'ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது' என அனைவரும் பாராட்டினார்கள்.
விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் 'ஓடிடி தளத்தில் நல்ல படங்கள...
சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார்.
இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்த...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு போயஸ்கார்டனில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
அரசியலில் இருந்த ஜெயலலிதாவுக்கும், அரசியலுக்கு வரலாம் என்றிருந்த ரஜினிக்கும் பல முரண்கள் இருந்தது. பல முறை ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த கடுமையாக விமர்சித்த வரலாறும் உண்டு. அப்படி இருக்கும் சூழலில் ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆகிற நிலையில் எந்த ஆண்டும் இப்படி ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மரியாதை செலுத்தியது இல்லை. இந்த ஆண்டு யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியது தமிழ் நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
...