தினகரன் ஒரு கிரிமினல் துரோகி உதகை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!
நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரைப்பந்தய மைதானத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில், எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''நாம் ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். உலகத்தில் இருக்கின்ற எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வராத எண்ணம் கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல். ஆகவே, இதற்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை மிஞ்சி, இப்பொழுது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்ற ஒரு ஃபார்முலாவைக் கண்டுபிடித்து தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருக்கின்றார்.
அந்த ஃபார்முலா ஹவாலா ஃபார்முலா. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூடக் கிடைய...









