விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்
விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம்.
வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பல பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகம் பெட்டிகளை நிர்ணயித்துள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும்.
முதல் வகுப்பில் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். ரெயில் நிலையங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு தனியாக இருக்கை வசதிகள் இருக்கும்.
இந்த நிலையில் முதல் வகுப்பை விட கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியை ...









