வெட்டு ,குத்து ,மது, போதை என்று தீமையைப் பரப்பும் பெரிய பட்ஜெட் படங்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு!
வெட்டு ,குத்து ,மது, போதை என்று தீமையைப் பரப்பும் பெரிய பட்ஜெட் படங்கள்: தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கே. ராஜன் பேச்சு!
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் 'மகேஸ்வரன் மகிமை'.இப்படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஆர்.தவமணி.
ஒரு முரட்டு சிவ பக்தனின் பக்தியை வெளிப்படுத்தும் வகையில் குடும்பம் சமூகம் சார்ந்த கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் மற்றும் சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் கதை நாயகனாக ஹரிஹரன் நடித்துள்ளார்.ஸ்ரீ செழியன் அவருக்கு ஜோடியாக ந...









