“டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!
“டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!
ராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது.
வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் ம...









