சொகுசு கார் வரி ஏய்ப்பு விசாரணை அதிகாரிகள் முன் அமலா பால் ஆஜராகி விளக்கம்..!
சொகுசு கார் வரி ஏய்ப்பு
- நடிகை அமலா பால் ஆஜராகி விளக்கம்.
சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கேரளாவில் ஆடம்பர கார்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் சுமார் 13 சதவீதமே வரி வசூலிக்கப்படுவதால், கேரளாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் சொகுசு காரை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் கேரள அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கையில் பிரபல நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது...






