விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’
விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் 'நொடிக்கு நொடி' பூஜையுடன் துவக்கம்
நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் 'நொடிக்கு நொடி' ஆச்சரியங்களை தாங்கி வருகிறது
தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், 'புத்தகம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார்.
எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக 'நொடிக்கு நொடி' எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.
நாக்ஸ் ஸ்டுடியோஸ்' ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது 'நொடிக்கு நொடி'.
திரைப்ப...









