முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் 'தளபதி' படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ரஜினி நடித்த படங்களில் சிறந்த படமாகக் குறிப்பிடப்படுவது 'தளபதி' படம். 'தளபதி' படத்தின் மூலமே இயக்குநர் மணிரத்னமும் அதிகமாகப் பேசப்பட்டார். நட்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுகு இப்போதும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது இந்தப் படம் தான். இந்தப் படத்தில் இணைந்து நடித்த ரஜினியும், மம்முட்டியும் 'சூர்யா தேவா' ஆகவே ரசிகர்கள் மனதில் பதிந்திருப்பதே இப்படத்தின் வெற்றி. இந்தக் கூட்டணி இப்போது மீண்டும் இணைகிறது
1991-ல் மணிரத்னம் இயக்கிய படம் 'தளபதி'. ரஜினி - மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர். இளையராஜா அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் தமிழின் கிளாசிக் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது
அந்தச் சமயத்தில் சூப்பர் ஹிட்டான 'தளபதி' படத்திற்கு பிறகு ரஜின...









