வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- மணிமுத்தாறில் குளிக்க தடை!

குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- மணிமுத்தாறில் குளிக்க தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாத சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சில தினங்களாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்ட நிலை காணப்பட்டது. தற்போது இந்த மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் குளிக்க வனத்துறை ...
வைரலாகும் பத்து தல பட பாடல்!

வைரலாகும் பத்து தல பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/erGBtpMPi4Q சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி (இன்று) நள்ளிர...
பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்!

பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
நான் 90 சதவிகிதம் குணம் அடைந்து விட்டேன்- விஜய் ஆண்டனி !

நான் 90 சதவிகிதம் குணம் அடைந்து விட்டேன்- விஜய் ஆண்டனி !

Uncategorized
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தான் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டதாக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் ...
சமந்தா ரூத் பிரபு,  வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ  இந்திய ஒரிஜினல்  சிட்டாடலில் நடிக்கிறார்!

சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரைப்படத் தயாரிப்பில் தனித்துவம் வாய்ந்த இரட்டையர்களான ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்படும் வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 மட்டுமே உறுப்பினர் சந்தா செலுத்துவ...

தளபதி 67 படத்தின் நடிகர்கள் பட்டியல்!

Uncategorized
வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாகவும்...
பாலியல் குற்றவாளிகளுக்கு இப்படியும் தண்டனை கொடுக்கலாம் என சர்ச்சையை கிளப்பும் மெய்ப்பட செய் – கோடங்கி விமர்சனம் 3/5

பாலியல் குற்றவாளிகளுக்கு இப்படியும் தண்டனை கொடுக்கலாம் என சர்ச்சையை கிளப்பும் மெய்ப்பட செய் – கோடங்கி விமர்சனம் 3/5

CINI NEWS, REVIEWS, விமர்சனம்
கடந்த 8 ஆண்டுகளை விட 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. அதோடு இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இணைத்து தனது இயக்கத்தில் மெய்ப்பட செய் என்ற பெயரில் ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார் வேலன். கதைப்படி… தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா அவர்களை பிரிக்க நினைக்கிறார் ஆனால் அது முடியவில்லை, கதாநாயகனின் அப்பாவோ தன் மகனால் ஊரில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை என்பதனால் இவர்களை வீட்டைவிட்டு வெளியே ...
குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம் ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வரிசையில், முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். கதைப்படி, 1990-களில் புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வத்தை அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். வயதுக்கு வந்த உடனேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் பத்தாம் வகுப்பு படித்ததே இல்லை என்ற நிலை இர...
உலக கோப்பை ஹாக்கியில் அசத்திய சகோதரர்கள்… அரையிறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி!

உலக கோப்பை ஹாக்கியில் அசத்திய சகோதரர்கள்… அரையிறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்ற கிராம்புஷ் சகோதரர்கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர். ஒரே தேசிய அணிக்காக சகோதரர்கள் விளையாடுவது புதிதல்ல, ஆனால் இருவரும் ஒரே போட்டியில் கோல் அடிப்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) கோல் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். போட்டியின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2...
பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் ‘சைந்தவ்’!

பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் ‘சைந்தவ்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான 'சைந்தவ்' திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த...