நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்
தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது ; நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்
ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன...









