10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார் .
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்ற அமர்வு நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
கடந்த 2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டத் திருத்தம் 103 ஆவது அரசியல் சாசன திருத்தம் என்றழைக்கப்படுகிறது.
இந்த சட்டத் திருதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில்,
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், செப்டம்பர் 27இல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
நவம்பர் 7 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வி...









