சினிமா நாடகம் என்றாலே என் அண்ணன் பெல்ட் அல்லது கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு என்னை அடிக்கத் துரத்துவார் – “ராபர்” பட இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ்
"ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது
இயக்குனர் பாக்யராஜ் சார் பேசும்போது,
முதலில் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலனுக்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் ஒரு படத்தை எடுப்பது பெரிதல்ல அதை வெளி கொண்டு வருவதற்கு முதுகெலும்பு போல இருந்து ஆதரவு தர வேண்டும். அந்த வேலையை சக்தி செய்து இருக்கிறார். அதில் முதல் தயாரிப்பாளருக்கு அவர் இந்த ஆதரவு கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னை விட சாந்தனுவிற்கு தான் மிகவும் பழக்கம். அவர்கள் இருவரும் தான் அடிக்கடி கோயம்புத்தூரில் சந்தித்துக் கொள்வார்கள். நான் எப்போதாவது இதுபோன்ற விழாவில் தான் சந்திப்பேன்.
கவிதா இப்படத்தை தயாரித்திருப்பதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தமிழில் நிகழ...









