ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும்: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும்: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு தரப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ஜூன் மாதத்திற்கு பின்  வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியிருந்தது. இதை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும்...
கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி!

கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கடந்த 2 நாட்களுககு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் பெரும்பாலான மேயர்கள் இந்த பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு முழுமையாக விதிகள் பிடிபடவில்லை. இதேபோல் நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையொட்டி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்க...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் துரைமுருகன்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் துரைமுருகன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
வேலூர் மாவட்டம் சேனூர்அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின்...
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ந்தேதி (இன்று) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ந்தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தன...
இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை. இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்....
டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டா அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.   டெல்லி தீன்தயாளர் உபாத்யாயா மார்க்கில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் தி.மு.கவுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தைத் திறந்துவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து தமிழகத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தநிலையில், இன்று அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் முதல்வருமான மு....
‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய  மாநிலம்!

‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய மாநிலம்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. கொரோனா பரவலின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அங்கு தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்.2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநில புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார். “குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப...
படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கீவ் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் படைகள் உக்ரைனின் வேறு பகுதியில், தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ, உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான நேர்மறையான...
அம்பேத்கார் பட சர்ச்சை வங்கி அதிகாரிக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி தீர்ப்பு

அம்பேத்கார் பட சர்ச்சை வங்கி அதிகாரிக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
  சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர்,கடந்த 2004ம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக 2006ம் ஆண்டு வங்கி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம், கெளரிசங்கருக்கு மீண்டும் பணி வழங்க 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வங்கியின் பணியிடை நீக்கம் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கெளரிசங்கர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகளில் தேச தந்தை மகாத்மா...
முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி தி.மு.க.வுக்கு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பா.ஜனதா அலுவலகம் அருகே 2013-ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் தி.மு.க. அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி டெல்லி அறிவாலய கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிவாலயத்தை திறக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததால் திறப்பு விழா தேதி உடனே முடிவு செ...