மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம்.
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 - வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
சபாநாயகர் உரை
ஸ்ரீ ஓம் பிர்லா தனது பட்டமளிப்பு விழா உரையில், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மறைந்த ஐசரி வேலனின் பாரம...
"பசும்பொன் தேவர் வரலாறு" ஆவணபடம் உருவான கதை!
சில நினைவுகள் மறக்க முடியாதவை… சில நினைவுகள் சட்டென மறக்கும்… சிலது காலம் கடந்தும் நம்மை நினைவுபடுத்தும்… அந்த வகையில் காலங்கள் கடந்தாலும் நான் இல்லாமல் போனாலும் இந்த எங்கள் முயற்சி காலத்துக்கும் நிலையாய் நிற்க்கும் என்றால் அது இது தான்…
ஒருவரின் நினைவிடத்திற்கு குருபூஜை நாளில் ஆண்டு தேறும் வருகிற மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறதே… சாதி மதம் கடந்து ஆட்டம், பாட்டம், முளைப்பாரி, பால் குடம், சிலம்பாட்டம் என களை கட்டும் மக்கள் ஆர்வம் எதனால் என இணையத்தில் தேடிய போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…
காரணம்… லட்சக்கணக்கில் குவியும் மக்களின் ஆதர்ச நாயகன் பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் புகைப்படங்களோ அவரைப்பற்றிய வரலாறுகளோ பெரிதாக இல்லை…
அப்போது இணையத்தில் “பசும்பொன் தேவர்” எனதேடினால் நடிஅர் திலகம் சிவாஜிகணேசன் ப...