ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்!

முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்....
பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை!

பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காணொலி மூலம் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஐந்து முதல்வர்களுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இறுதியில், பிரதமர் திடீரென பணவீக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது அவர் குற்றம் சாட்ட முயன்றார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கியமாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், அதன் விளைவுகள் மாநிலங்களில் பிரதிபலிக்கின்றன. பணவீக்கம் பிரச்னை தொடர்பாக, அனைத்து முதல்வர்களுடனும் ஆலோசனை க...
தொடர் மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி!

தொடர் மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி!

HOME SLIDER, NEWS, politics, sports, அரசியல், செய்திகள்
நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்.   இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்....
ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 56 நாட்களாக போர் செய்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்  நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேட்டோவில் சேருவதற்கு ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்கும் கனடா நிச்சயமாக தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்....
கடனில் மூழ்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான்-பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!

கடனில் மூழ்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான்-பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று முன்தினம் பதவியேற்றது. 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று முதல் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்தார். இதுபற்றி அவர் பேசுகையில், “நீங்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக போராடுவதால், நான் இதை ஒரு போர் மந்திரி சபையாக கருதுகிறேன். நாடு எனும் படகு கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது. அந்த படகை நாம் கரைக்கு கொண்டுசெல்ல வேண்டும். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற சவால்களுடன் நாம் போராட வேண்டியுள்ளது. ஏனெனில் முந்தைய அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதி...
இலங்கை – போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கை – போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியாததால் அந்தப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. பல இடங்களில் தெருமுனைப் போராட்டங்களும் அதிபருக்கு எதிராக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் ஒருவர் பலியாகினார். மேலும், பலர் காயமடைந்த...
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு!

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் தி...
தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது!

தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மிதான விவாதம் நடைபெற்று வந்தது. கடந்த 13-ந்தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 14-ந்தேதி முதல் 17-ந்தேதி (இன்று) வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்து, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து வரு...
இளையராஜாவின் கருத்திற்கு வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்!

இளையராஜாவின் கருத்திற்கு வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள்
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கி...
இளையராஜா பாவம்… சொல்கிறார் திருமாவளவன் MP

இளையராஜா பாவம்… சொல்கிறார் திருமாவளவன் MP

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
        ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது, அரசியல் ஆதாயங்களுக்காக இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை. விளிம்பு நிலை மக்களுக்கு பாடுபட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் மட்டுமே முடிவுகளை எடுத்து வருகிறேன். இதை தொடர வேண்டிய வரலாற்று கட்டாயம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேச எழும்போதெல்லாம் பதட்டமாக தான் இருப்போம். முக்கிய கட்சிகள் பேசி முடித்தபின் தான் நான் பேச வேண்டிய நிலை வரும். மற்ற உறுப்பினர்கள் பேசுவதை உள்வாங்கிக் கொண்டு அவர்கள் பேசாததை பேசுவேன் கர்நாடகாவில் ஹிஜாப்க்கு எதிராக சங் பரிவார் கும்பல் தூண்டிவிட்டு மாணவ சமூகத்தை பி...