புதன்கிழமை, ஜூலை 29
Shadow

World News

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு!

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் தொடர்ந்து ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரெண்ட் ரீனாட் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என தகவல்கள் வெளியானது....
ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்!

ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவி‌ஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்த...
ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது!

ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர். டிரக்கில் இருந்த நபரை போலீசார் வெளியேறச் சொல்லி சோதனை செய்தபோது, அந்த நபர் அணிந்திருந்த ஜாக்கெட், பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் சுமார் 52 பையில் அடைக்கப்பட்டிருந்த 9 பாம்புகள், அரிய வகை 43 கொம்பு பல்லிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஊர்வனங்களை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்....
”அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்” தப்பி வந்த மாணவர்களுக்கு உக்ரைன் பல்கலை மின்னஞ்சல் தகவல்!

”அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்” தப்பி வந்த மாணவர்களுக்கு உக்ரைன் பல்கலை மின்னஞ்சல் தகவல்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  கார்கிவ் தேசிய மெடிக்கல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம்  தொடங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளதாக உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய நெல்லை மாணவர்   தெரிவித்துள்ளார். கார் கிவ் நகரிலிருந்து லிபியா வந்து சேர தமிழக அரசு அமைத்துள்ள குழு உதவி செய்ததாகவும் அங்கிருந்து, இந்திய தூதரகம் மூலமாக டெல்லிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ள மாணவர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் வகுப்புகள் நடைபெற்ற வந்தது. தற்போது,  ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று  வருகிறது. இதன் காரணமாக இந்திய அரசு  உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவின் விமானப்படை விமானங்கள் மூல...
சீனாவில் புதிய வைரஸ் பரவல்?

சீனாவில் புதிய வைரஸ் பரவல்?

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில்  உள்ளது. இந்த நகரில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவ...
பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!

பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
  இருதய மாற்று அறுவை சிகிச்சையில் புரட்சிகரம் என்று வர்ணிக்கப்பட்ட ஒரு ஆபரேஷனில் பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட அமெரிக்க நபர் டேவிட் பென்னட் (57) அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு மரணமடைந்தார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மேரிலேண்ட் மருத்துவமனை மார்ச் 9ம் தேதி இதனை அறிவித்தது. டேவிட் பென்னட், 57, மார்ச் 8 அன்று மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இறந்தார். மருத்துவர்கள் மரணத்திற்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை, சில நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது என்று மருத்துவமனை கூறியது. பல ஆண்டுகளாக மருத்துவர்கள் உயிரைக் காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்த முயன்றனர். மேரிலாந்தில் உள்ள ஹேகர்ஸ்டவுனைச் சேர்ந்த ஒரு கைவினைஞரான பென்னட், இந்த புதிய முயற்சிக்கான நபராக இருந்தார், ஏனெனில்...
தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு என்பது, உலக மக்களுக்கு கடந்த கால போர் சம்பவங்களை நினைவூட்டி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாபெரும் யுத்தமாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைனில் ரஷிய ராணுவம் நிகழ்த்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நிகழ்வுகள் தான், சர்வதேச அளவில் அண்மைக் காலமாக தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன. போரில் குடியிருப்பு பகுதிகளும் தாக்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அதேசமயம், ஜார்ஜியன் பாரா மிலிட்டரி திட்டத்தின்படி தன்னார்வலர்களும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் உக்ரைன் ஆண்கள் பலர் கைகளில் ஆயுதங்களை ஏந்தி, ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இந்த செய்திகளை தொடர்ந்து,...
ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!

ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 135 டாலராக அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடை விதிக்கப்பட்டிருப்பதால், பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில்  நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5,0 56 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 40,448 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் வெள்ளி வில...
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பிரச்னையால் ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யா குண்டுமழை பொழிவதால் சேதங்கள் அதிகரித்துள்ளன. கீவ் நகர் அருகே உள்ள சயோட்மையர் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பெட்ரோல் கிடங்கில் தீப்பற்றியது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் தீக்கிரையாயின மைக்கோலைவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன  ...
Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதால் அந்நாட்டின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட உள்ளது. மேலும், அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது. ஆப்பிள், போயிங், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிவிட்டர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் த...