 
            திரைப்பட இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
             
சென்னை சத்யபாமா பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அவர் இப்பல்கலைக்கழகத்தில் காட்சி தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் பேசிய அட்லீ, “கொஞ்ச நாளாவே பொய் சொன்னால் இருமல் வருது, ஏன்னு தெரியல. அதனால் முடிஞ்ச வரை உண்மையை சொல்றேன். பொய் சொன்னால் இரும்பல் வந்துவிடும்” என்று ஆரம்பித்தவர் நான் இந்த காலேஜில் பயங்கரமான ஸ்டூடண்ட் என்றார். உடனே அவருக்கு இருமல் வர… அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது…
தொடர்ந்து பேசிய அட்லி, “ஊருக்கு என்னவாக இருந்தாலும் வீட்டுக்கு அரசன்னு சொல்வாங்க. ஊருக்கு அரசனாக என்றால், சண்டைக்கு போகனும், ஜெயிக்கனும், அறிவுபூர்வமாக யோசிக்கனும். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு முன்னே அம்மா, நம்மளை அரசன்னு சொல்லிடுவாங்க. வா ராஜான்னு கூப்பிடுவாங்க. அந...        
        
    
 
                            









