செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் வேலை நிறுத்தம் நடக்க கூடிய 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஆட்டோக்களும் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன்...
மனைவிய கட்டாயப்படுத்தி “அது” வைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

மனைவிய கட்டாயப்படுத்தி “அது” வைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை நீக்க வேண்டும் என்பதற்காக கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் ...
”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், நடிகர்கள்
”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவார்கள். அதுபோல் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தவும் செய்வார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் முடிவு எடுத்தால் முதல்வர் தான், 2021-ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என்றும், 2026-ல் நடிகர் விஜய் எனக்குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டு உள்ளதோடு, 2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள...
பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்த நடிகை குட்டிபத்மினி!

பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்த நடிகை குட்டிபத்மினி!

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் நடிகையாகவும், சின்னத்திரையில் தயாரிப்பாளருமாகவும் வலம் வருபவர் குட்டி பத்மினி. இவர் சினிமாவை தாண்டி, அரசியலில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பிஜேபி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக குட்டி பத்மினி அறிவித்திருக்கிறார் இதுகுறித்து குட்டி பத்மினி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கடந்த 11 வருடமாக பிஜேபி கட்சியில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறேன். தற்போது பிஜேபி கட்சியில் இருந்து விலகுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வேலைகள் மும்பையில் அதிகம் இருப்பதால், அரசியலில் ஈடுபட தேவையான நேரம் கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்....
மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா… வெளி நாட்டு பெண் பக்தை இ-மெயிலில் புகார்!

மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா… வெளி நாட்டு பெண் பக்தை இ-மெயிலில் புகார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார். அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அவர் புகார் அனுப்பி வைத்திருந்தார். அதில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார், அவரது சீடர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். மேலும் அந்த பெண் தனது டுவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார். ஆனால் நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடத...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளி நாட்டுப்பயணமாக இன்று துபாய் செல்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளி நாட்டுப்பயணமாக இன்று துபாய் செல்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. உலகக் கண்காட்சிகள், மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உல...
ஏப்ரல் 1ம்தேதி முதல் இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடிதான் – தமிழக மாடலை பின்பற்ற நிதின் கட்கரி திட்டம்!

ஏப்ரல் 1ம்தேதி முதல் இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடிதான் – தமிழக மாடலை பின்பற்ற நிதின் கட்கரி திட்டம்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
    ஏப்ரல் 1-ம் தேதி நிதிஆண்டு தொடங்கவுள்ள நிலையில் மக்களவையில் சாலைகள் மறும் நெடுஞ்சாலைத்துறைக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்து மக்களவையில் விவாதத்தின்போது நிதின் கட்கரி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ‘டெல்லி - அம்ரிஸ்டர் - கத்ரா விரைவுச் சாலை தயாராகிக்கொண்டுள்ளது. டெல்லி - அம்ரிஸ்டர் இடையிலான சாலைப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். இந்தத் தூரத்தை நான்கு மணி நேரத்தில் சென்றடைவதுபோல இருக்கும். அதேபோல, டெல்லி - ஜெய்பூர், டெல்லி - மும்பை, டெல்லி - டேராடூன் விரைவுச் சாலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். ஜெய்ப்பூர், டேராடூன் சாலைகளின் பயண நேர இரண்டு மணி நேரமாக இருக்கும். அதேநேரத்தில் டெல்லி - மும்பை இடையிலான பயண தூரம் 12 மணி நேரமாக இருக்கும். ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையின் 11,650 அடி உயர ஷோஜி லா நெடுஞ்சாலையின் கீழ் அமையும் சுரங்க...
ரூ.100 கோடி மதிப்பிலான H 145 ரக சொகுசு ஹெலிகாப்டரை வாங்கிய முதல் இந்திய தொழிலதிபர்!

ரூ.100 கோடி மதிப்பிலான H 145 ரக சொகுசு ஹெலிகாப்டரை வாங்கிய முதல் இந்திய தொழிலதிபர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில் முதன் முதலாவதாக ரூ.100 கோடி மதிப்பிலான H 145 ரக சொகுசு ஹெலிகாப்டரை ஆர்பி குரூப் நிறுவனங்களின் சேர்மேன் ரவி பிள்ளை, வாங்கியுள்ளார். உலகளவில் 1,500 H 145 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ரூ.250 கோடி சொத்து மதிப்பை கொண்ட தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பல்வேறு நிறுவனங்களும் சொந்தமாக உள்ளன. அவரது, நிறுவனங்களில் சுமார் 70,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து நவீன பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட இந்த அதிநவீன ஹெலிகாப்டரில் 7 பயணிகளையும், பைலட்டையும் ஏற்றிச் செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் இருந்தும் தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன் கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் கூடுதலாக, ஆற்றல் திறன் மிகுந்த இருக்கைகளைக் கொண்டள்ளது. இதன் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் பயணிகளின் பாதுகாப்பை அத...
கோடையை சமாளிக்க மாயூரநாதர் கோயில் யானைக்கு பேன் வசதி!

கோடையை சமாளிக்க மாயூரநாதர் கோயில் யானைக்கு பேன் வசதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மயிலாடுதுறையில் பாரம்பரிய அடையாளமாக 50 ஆண்டுகளாக வலம்வரும் மாயூரநாதர் கோயில் யானைக்கு கொட்டகையில் வனவிலங்கு ஆர்வலர் ஏற்பாட்டில் மின்விசிறி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அபயாம்பாள் யானை மகிழ்ச்சியில் திளைக்கின்றது. மயிலாடுதுறையில் பழைமையும், பிரசித்தியும் வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 60 வயதுடைய அபயாம்பாள் என்கிற யானை கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. விழாக்காலங்களில் உற்சவ மூர்த்தி புறப்பாட்டின்போது சுவாமிக்கு முன்னர் யானை அபயாம்பாள் சென்றால் தான் விழா களைகட்டும். 50 ஆண்டுகளாக இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடப்பட்டு வருகிறார் யானை அபயாம்பாள். 2 ஆண்டுகளுக்கு முன்னர் யானை ஆர்வலர் ஒருவர் இந்த யானைக்கு கோடைக்காலத்தில் ஷவர் வசதி ஏற்படுத்தித் தந்தார். கடந்த வருடம் செல்வந்...
நடிகர் சங்க புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக கமல், பூச்சிமுருகன், கோவைசரளா உட்பட 9பேர் தேர்வு

நடிகர் சங்க புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக கமல், பூச்சிமுருகன், கோவைசரளா உட்பட 9பேர் தேர்வு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம் இனிதே நடைபெற்றது ! பல போராட்டங்களுக்கு பிறகு சுமார் 2 வருடங்கள் கழித்து தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு விஷால் தலைமையிலான நடிகர் சங்க அணி வெற்றி பெற்ற நிலையில், வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதல் கூட்டம் நேற்று இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி தந்த ஓய்வு பெற்ற நீதியரசர் திரு E.பத்மனாபன் அவர்களுக்கும், இவ்வழக்கில், சிரயான முறையிலும்.. நியாயமான முறையிலும் தீர்பளித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சங்க சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் திரு.கிருஷ்ணா திரு.ரவீந்திரன், மூ...