செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR

வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR   https://youtu.be/8BYgd0SpkQI
முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை!

முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது, முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என பேசினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது....
போர் வீரராக மாறும் பிரபு தேவா!

போர் வீரராக மாறும் பிரபு தேவா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்திய சினிமாவில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருப்பவர் பிரபு தேவா. இவர் தற்போது ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’ போன்ற பல படங்களில் நடித்துவருகிறார். இவர் கடைசியாக நடித்த ”தேள்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பிரபு தேவா அடுத்தாக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விடிவி கணேஷ், மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'முசாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டைமென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். ஜப்பானிய ப...
இன்றைய முக்கியச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. குரூப் 2 -வில் மொத்தம் 5 ஆயிரத்து 831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார். இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் 20-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் செய்து வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார். நதிகள் இணைப்புத்திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை ம...
தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர், 1-வது வார்டில் போட்டியிடும் புஷ்பலதா அவர்களை ஆதரித்து செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததில் இருந்து, தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது என்று கூறினார். இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி  போனது. இது அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது. கூட்டணியில் அத...
இந்தியாவின் இளம் வயது பெண் மேயரை கரம்பிடிக்கும் கேரள எம்.எல்.ஏ.

இந்தியாவின் இளம் வயது பெண் மேயரை கரம்பிடிக்கும் கேரள எம்.எல்.ஏ.

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  கேரளாவில் கடந்த 2020 ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதனையடுத்து, திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்பவரை மேயராக அறிவித்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார். அது திருவனந்தபுரம் போன்ற மாநிலத் தலைநகருக்கு மேயரானது கூடுதல் சிறப்பாக அமைந்தது. அவருடைய அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இந்த உயரத்தை அவர் எட்டியிருந்தார். தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்...
இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12 ஆயிரத்து 604 வார்டு பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் போல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களிடம் தங்களின் வாக்குறுதிகளை கூறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதன்பிறகு வேட்பாளர்கள் தங...
நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை 45- வதுபுத்தக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்பிறகு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பாபாசி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உரைநடைக்கான கலைஞர் பொற்கிழி விருது பத்திரிக்கையாளர் சமஸ், நாடகத்திற்கான பொற்கிழி விருது பிரசன்னா ராமாசி, கவிதைக்கான பொற்கிழி விருது ஆசைத்தம்பி, புதினத்திற்கு அ.வெண்ணிலா, பிறமொழிக்கான பொற்கிழி விருது பால் சக்கரியா, ஆங்கலத்திற்கான பொற்கிழி விருது மீனா கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது. பபாசி விருதுகளான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது ச.மெ.சோமசுந்தரம், சிறந்த பதிப்பாளருக்கான விருது ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பொன்னழகு, குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது திருவை பாபு, பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கர், நெல்லை க.ம...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது....
பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு!

பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஹெல்மெட்டுகளை தயாரிக்கும்படி தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை 40 கிமீ வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும்  என்றும் மத்திய அரசு கூறி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சாதனம் மற்றும் ஹெல்மெட் பயன்படுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முன்பு முன்மொழிந்தது. இது ...