அரசு கொடுத்த ரூ.2,000 பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி!
அரசு கொடுத்த ரூ.2,000 பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி!
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது. அந்தந்த ரேசன் கடைகள் மூலம் கடந்த 15-ந் தேதி முதல் இந்த நிதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி ரத்தினம்மாள் (வயது 74) என்பவர் தங்களுக்கு அரசு கொடுத்த ரூ.2 ஆயிரம் பணத்தை முதல்வ...









