ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை!

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலகம், செய்திகள்
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் - நாசா எச்சரிக்கை! காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது. அதில், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என தெரிவி...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு  அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
விவசாயிகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் பவன்குமார்!!

விவசாயிகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் பவன்குமார்!!

NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி தலைவர் திரு. பவன் குமார்  கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். அவர் வெளியிட்ட கோரிக்கைகள்: தமிழகத்தில் சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கும் தமிழக அரசுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தனது வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதியும், விவசாயத்தை மேம்படுத்தவும் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு சில கோரிக்கைகளை முன் வைக்கிறது. கோரிக்கைகள் # காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க மண்டல வா...
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

helth tips, NEWS, செய்திகள்
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு - பஸ்கள் வழக்கம்போல் இயங்கின! கோவை மாவட்டத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடக்கூடிய வீதிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி க...
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி! ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். ஏற்கனவே தலிபான்களிடம் நிம்ரோஸ் மாகாண தலைநகரம் சாரஞ்ச் வீழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றினார்கள். 2 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது. தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. நகருக்குள் பதுங்கி இருக்கும் ...
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்!

ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர். அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா. இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் ரஷிய வீரரின் உடும்பு பிடியால் புள்ளிகளை இழந்த ரவிக்குமார்...
படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன்… தலையில் பலத்த காயம்!

படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன்… தலையில் பலத்த காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன்... தலையில் பலத்த காயம்! நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவாத்மிகா நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிந்தது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சேரன் கீழே விழுந்து காயமடைந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டதாம். தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால், சிகிச்சை முடிந்த கையோடு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு...
ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்!

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்துள்ளது. மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59-வது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது....
ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா! டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது. ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்...
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்! 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....