ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தப்லிக் ஜமாத் விவகாரத்தில் 36 வெளிநாட்டினரை விடுதலை செய்தது நீதிமன்றம்

தப்லிக் ஜமாத் விவகாரத்தில் 36 வெளிநாட்டினரை விடுதலை செய்தது நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து வெளியிடப்பட்ட அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியதாகவும், மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 36 வெளிநாட்டினரை டெல்லி நீதிமன்றம் நேற்று விடுவித்தது. தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண்குமார் கார்க், 14 நாடுகளைச் சேர்ந்த 36 வெளிநாட்டவர்களை வழக்கிலிருந்து விடுவித்தார். கடந்த ஆகஸ்ட் 24’ம் தேதி, இந்திய தண்டனைச் சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. எனினும், வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத் சபையில் கலந்து கொண்ட வெளிநாட்டினர், விசா விதிமுறைகளை மீற...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி வசூல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டனர். இதனால் உண்டியல் வருவாய் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 35 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு பின்னர் தினமும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்து வந்தது. முதல் முறையாக கொரோனா தொற்ற...
வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து பரிந்துரைகளும் நிராகரிப்பு, போராட்டம் தொடரும் – விவசாய சங்கங்கள்

வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து பரிந்துரைகளும் நிராகரிப்பு, போராட்டம் தொடரும் – விவசாய சங்கங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு அளித்த அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, இந்தப் போராட்டம் 20 நாட்களை கடந்துள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அமைப்பினர், அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் என அடுத்தடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அடுத்த கட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்...
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு – அகிலேஷ் யாதவ்

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு – அகிலேஷ் யாதவ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வகுப்புவாதத்தை தூண்ட துவங்கி உள்ளது. பா.ஜ.க வெற்றிபெற நாங்கள் விரும்பவில்லை. எனவே சமஜ்வாடி கட்சி சார்பில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தவர்களாக உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்....
இயக்குனரான தொகுப்பாளினி டிடி

இயக்குனரான தொகுப்பாளினி டிடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி, தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான என்னு நின்டே மொய்தீன் படத்தில் இடம்பெறும் முக்கத்து பெண்ணே பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக உருவாக்கி உள்ளனர். இதை டிடி தயாரித்து, இயக்கிதோடு மட்டுமல்லாமல் அவரே நடிக்கவும் செய்துள்ளார். நிகில் மேத்யூ பாடியுள்ள இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்....
கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு!

கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் இதர வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய குடும்பங்கள் வருடத்துக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு ஆர்டர் செய்யும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு சிலிண்டர் விலை ரூ.734 என நிர்ணய...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் 24-ம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலும், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் அடுத்து உருவான புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டியது. அதன்பின், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அட...
திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி -முதலமைச்சர் பழனிசாமி

திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி -முதலமைச்சர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் (50% ...
வாடகை பாக்கிதராத லதாரஜினிக்கு கோர்ட் கெடு!

வாடகை பாக்கிதராத லதாரஜினிக்கு கோர்ட் கெடு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு! சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் வழக்கில் உத்தரவு. அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது எனவும் தடை.  
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – பார்த்திபன்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – பார்த்திபன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது. கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.  தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்....