செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேகமாக இழுத்தார். இதனால் பொறுமை இழந்த போப் அவரது கையை வேகமாக தட்டிவிடுவார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார். அதோடு சில நேரங்களில் தானும் பொறுமையிழந்து கோபம் அடைன்ரு விடுவதாகவும் போப் கூறி மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் போப் கோபமடையும் ஒரு சூழல் உருவானது. ஆனால் அதை போப் நாசுக்காக தவிர்த்தது சுவாரஸ்யமான நிகழ்வாகி மீண்டும் வைரல் ஆகி உள்ளது. பிரான்சிஸில் வாரம் தோறும் தன்னை பார்க்க வருபவர்களை போப் சந்திப்பார். அப்போது அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் 'போப் ஒரு முத்தம் கிடைக்குமா?' என்று கேட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்..* *ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார்..* *அப்போது பேசிய அவர், “ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது..* *அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். ஈரானின் செயல்களை சகிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவி...
பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை மர்ம கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் JNU மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதி...
முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!

முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்" சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்! ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஏற்கனவே ஈரான் அறிவித்த நிலையில், தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியை கொடுப்போம் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ட்ரம்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்...
உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின்  இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின் இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்.... 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்... _"சுலைமானியின்.._" ... இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி… உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி … இறுதிச்சடங்கு - வீடியோ டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகி...
கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்தார். ஆளுநா் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்: கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் 1000க்கு 917 என்பதில் இருந்து 943 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் 43.9% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விடஅ திகம். 2019 - 20ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறி...
போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி  பெண் பலி..!

போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி பெண் பலி..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சென்னை சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மனைவி பத்மாவதி என்பவர் தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார் போண்டா வாங்கி மகளுக்கு ஆசையாக கொடுத்துள்ளார். அந்த போண்டாவை பத்மாவதி சாப்பிட்டபோது திடீரென போண்டா அவரது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை அவரது தாயார் மற்றும் கணவர் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்ததால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் உருளைக்கிழங்கு போண்டாவை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிட்டுள்ளார். அதனால்தான் மூச்சுகுழாய்க்குள் உருளைக...
குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் பிரான்சிஸ் புத்தாண்டு அறிவுரை

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் பிரான்சிஸ் புத்தாண்டு அறிவுரை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் அறிவுரை* தூங்கும் நேரத்தை தவிர கிட்டத்தட்ட நாள் முழுவதும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். அப்படி செல்போன்களுக்கு அடிமையானவர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கி உள்ளார். உங்கள் செல்போன்களை தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என அவர் கூறினார். ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி ‘‘அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள்’’ அதையே நீங்களும் செய்யுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம்’’ என்றார்....
இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  "இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்" தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்     SNS Movies பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்...
விருது பெற்ற அமிதாப்பை வாழ்த்திய ரஜினி..!

விருது பெற்ற அமிதாப்பை வாழ்த்திய ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  டெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.