சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறு...
கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி!

கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி! கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த கட்டிடம் இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது....
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் நிலையை பொறுத்து தளர்வுகளை அனுமதிக்கலாமா என சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இந்த கூட்...
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று !

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று !

HOME SLIDER, NEWS, செய்திகள்
  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5% இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக www.tnhealth.tn.gov.in, மற்றும் https://tnmedicalselection.net இணையதள முகவரிகள் வெயிடப்பட்டுள்ளன...
டப்பிங் சங்கத்தில் பல கோடி மோசடி செய்த ராதாரவி… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி!

டப்பிங் சங்கத்தில் பல கோடி மோசடி செய்த ராதாரவி… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
    நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கத்தில் பல கோடி முறைகேடு செய்திருப்பது விசாரணையில் அம்பலம்! தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உத்திரவு ந.க‌.எண்.ஆ3/5281/2019 தேதி 10.01.2022 நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், டப்பிங் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான  மயிலை S குமார்,  சிஜிமோல், V காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தனர். 2019 ல் தொடர்ந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  S M சுப்பிரமணியம் அவர்கள், நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் செய்திருப்பதாக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள் அனைத்தையும் தீர விசாரிக்கும் படி The Additional Registrar of Trade Unions – No. 1 cum Deputy C...
சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து “சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்” என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின் தல...
இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு, மன்...
டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” கோஷம்!

டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” கோஷம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” என்ற கோஷத்தை கையில் எடுத்திருக்கிறார். சென்னையில் இன்று நடைபெற்ற் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்கு போராடிய வட தமிழக தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தமிழக அரசின் சார்பில் குடியரசுத் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று தேசிய கொடியை பறக்கவிட்டார். இதை தொடர்ந்து தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. இந்நிலையில், இந்த அணிவகுப்பில் வடதமிழக விடுதலை போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக ஒரு டிவிட் பதிவை போட்டிருக்கிறார் ராமதாஸ். அதில் சென்னையில...
கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!

கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெனிஃபர் குட்வின் (வயது 43). இவர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான செயலை செய்து வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார். இவர் ஜோஸ் டெல்லாஸ் என்ற ஒரு நடிகரை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் SiriusXM என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது தான் தனது கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவியதாக கூறியுள்ளார். ஜெனிஃபர் குட்வினின் தோழி ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்துள்ளது. இதற்காக தோழி டாக்டரிடம் இது குறித்து பேசிய பொழுது செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெனிஃபருக்கு தன் கணவரின் விந்தணுவை தோழிக்கு தானமாக கொடுக்கும் எண்ணம் இருந்துள்ளது. ஜ...
தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
      சென்னை ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காகது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..  நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், குடியரசு தினத்தை ஒட்டி வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என். சுவாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, ”எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் சொல்ல அந்த உத்தரவை காட்டுங்கள் என கேட்டபோது, ...