சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

சிவாமனசுல புஷ்பா சினிமாவுக்கு தடைவிதித்த தணிக்கைதுறைக்கு கோர்ட் நோட்டீஸ்..!

சிவாமனசுல புஷ்பா சினிமாவுக்கு தடைவிதித்த தணிக்கைதுறைக்கு கோர்ட் நோட்டீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், தயாரிப்பாளர் வாராகி இயக்கத்தில் ‘சிவா மனசில புஷ்பா’ என்ற பெயரில் புதிய அரசியல் படம் தயாராகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் 20–க்கும் அதிகமான இடங்களில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறினர். படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்றார்கள். இதனை படக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் படத்தை வெளியிட தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பினர். நடிகை கவுதமி உள்ளிட்ட மேல் முறையீட்டு குழுவினர் படத்தை பார்த்து சிவா, புஷ்பா என்ற கதாபாத்திரங்கள் பெயரையும் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்று கூறினர். படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் வாராகி சம்மதிக்காததால் ...
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    இந்துக்கள் மனம் புண்படும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலங்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போது, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பசு குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், மேலும் பல இடங்களிலும் இந்துக்கள் குறித்து மோசமாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கோய...
விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்…தங்கம் வென்ற கையோடு காதலனை கைப்பிடித்த மல்யுத்த வீராங்கனை

விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்…தங்கம் வென்ற கையோடு காதலனை கைப்பிடித்த மல்யுத்த வீராங்கனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அன்று அவரது பிறந்த நாள் 24வது பிறந்த நாள் என்பதால், அதையும் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி விமான நிலையத்திலேயே கொண்டாடியுள்ளார். முன்னதாக, ஆசிய விளையாட்டில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்றார் வினேஷ் போகாட். அவர் சென்ற ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்று இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் தங்கம் வென்று, ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.  ...
திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது – துரைமுருகன்

திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது – துரைமுருகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:- உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார். தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர். தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்....
நான் கலைஞர் இல்லை இன்று புதிதாய் பிறந்தேன் – தலைவரானதும் ஸ்டாலின் முதல் பேச்சு

நான் கலைஞர் இல்லை இன்று புதிதாய் பிறந்தேன் – தலைவரானதும் ஸ்டாலின் முதல் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நான் தலைவர் கலைஞர் இல்லை - அவர் போல பேசத் தெரியாது - அவரைப் போல மொழியை ஆளத் தெரியாது ஆனால் எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு இருக்கிறது கலைஞரின் கொள்கை தீபம் கையில் இருப்பது, முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமமானது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என நான் வாழ்வதாக, கலைஞரே என்னை பாராட்டி எழுதியுள்ளார் என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன் என்னைவிட திமுக பெரிது - திமுகவும், உதயசூரியனும், கொடியும் எந்த தனிமனிதனையும்விட பெரிது கலைஞர் இருக்கும்போதே, திமுகவின் அடுத்த தலைவராகும் தகுதி படைத்தவர் மு.க.ஸ்டாலின் என்று முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் கலைஞரின் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட கலைஞரின் தொண்டன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் ஆனது திமுக எனும் கோட்டை திமுகவையும், ...
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை வாழ்த்து..! திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்! - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது. மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு...
கபடி வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்

கபடி வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  கபடி வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர முன்னணி இயக்குநர்களின் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சினிமா மட்டும் இன்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்களை துரை சுதாகார் கெளரவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கபடி தொடர் நடத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் கலந்துக் கொண்டது. இத்தொடரில் சேலத்தை சேர்ந்த சவன்மேன் ஆர்மி அணி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் வடுவூர் அணியினர் வென்றனர். முதல் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், திரைப்பட நட...
கலைஞர் சமாதியில் மலர் தூவி விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி..!

கலைஞர் சமாதியில் மலர் தூவி விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்ணீர் மல்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி:   தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பிறகு,தேமுதிக தலைவர் திரு. கேப்டன் விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடனும், புதுத் தெம்புடனும் காணப்படும் புகைப் படங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார் இதனையடுத்து அங்கிருந்து வீட்டிற்குசெல்லாமல் தனது குடும்பத்தினருடன...
6 மாசம் தள்ளிப் போன நடிகர் சங்க தேர்தல் – பொதுக்குழு ஒப்புதல்

6 மாசம் தள்ளிப் போன நடிகர் சங்க தேர்தல் – பொதுக்குழு ஒப்புதல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளி நடத்த சென்னையில் நடந்த நடிகர் சங்க 65வது பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடிகர சங்க 65வது பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், மற்றும் ஐசரிகணேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/rsSvovZ5aYo   கூட்டத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர சங்க கட்டிடத்தை முடிப்பதற்கு வசதியாக மேலும் 6 மாதம் தேர்தலை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.  ...
ராதாரவி மீது மீண்டும் பண மோசடி புகார்..!

ராதாரவி மீது மீண்டும் பண மோசடி புகார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  நடிகரும் டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டார்கள் என ராதாரவி, சரத்குமார், செல்வராஜ் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.   இந்த சூழலில் டப்பிங யூனியன் கட்டிடம் வாங்கியதில் பண முறைகேடு நடந்திருப்பதாக ராதாரவி, செல்வராஜ் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து CSR வழங்கி இருக்கிறார்கள். ராதாரவி மீது மீண்டும் மோசடி புகாராமே? #DubbingUnion #NadigarSangam #ArtistesUnion https://youtu.be/pSK7Rdf2xtA...