சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு!

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு! வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.  அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா மீதான வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ள வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.   இந்த வழக்கில் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி சசிகலா தரப்பில் அளித்த மனுவில் பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பதில் மனு அளிக்க அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  ...
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனாலும், டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளும...
இளைஞனின் முகத்தில் குத்திய அமைச்சர் ஜெயக்குமார்!

இளைஞனின் முகத்தில் குத்திய அமைச்சர் ஜெயக்குமார்!

NEWS
  சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான குத்துச்சண்டை போட்டி துவங்குவதற்காக கூட்டம் கூடி இருந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தார் அமைச்சர் ஜெயக்குமார். இளைஞர்கள் அனைவரும் போட்டியில் மோதுவதற்கு தயாராக இருந்தபோது என்னோடு மோதத் தயாரா என்று கேட்டார் அமைச்சர் ஜெயக்குமார். வாருங்கள் தாராளமாக ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று இளைஞர் ஒருவர் கூப்பிட்டார்.வயதானவர் தானே இவரை நாம் எளிதாக ஜெயித்து விடலாம்; இவருக்கு பாக்சிங் எங்கே தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் இளைஞன் களத்தில் குதித்தார். அமைச்சரும் உடனே தயாராகி இளைஞனுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மோதல் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்ட அமைச்சர்,திடீரென தன் அதிரடி ஆட்டத்தை காட்டத் துவங்கினார். இளைஞனின் முகத்திலும், மார்பில...
உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட கல்லக்குடி போராட்ட களம்!

உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட கல்லக்குடி போராட்ட களம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கல்லக்குடியில் போராட்டம் நடத்திய இடத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் கல்லக்குடியில் பெயர் டால்மியாபுரம் என மாற்றி அமைக்கப்பட்ட அதை கண்டித்து 1...
ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் – மத்திய அரசு

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி8 முதல் 30ம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு  விமானம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது....
தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்திய மர்ம பெண்!

தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்திய மர்ம பெண்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மும்பையில் ரத்தின் டாடா கார் நம்பரைப் பெண் ஒருவர் தன் காரின் நம்பராக மாற்றிச் சுற்றி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. இவரைத் தெரியாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது. இவரது அலுவலகத்திற்கு இவர் கார் விதிமுறைகளை மீறிச் சென்றதாக போலீசார் தரப்பிலிருந்து இ-செல்லான் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த செல்லானில் விதிமுறை மீறல் செய்யப்பட்ட இடம் எனக் குறிப்பிட்ட இடத்திற்கு ரத்தன் டாடாவின் கார் செல்லவேயில்லை இதில் ஏதோ சதித் திட்டம் இருப்பதை உணர்ந்த ரத்தன் டாடா குழுமத்தினர், இது குறித்து போலீசாரிடம் விசாரித்தனர். அவர்கள் சம்பவம் குறித்துப் பதிவான காட்சிகளைப் பார்த்த போது குற்றத்தில் ஈடுபட்டது ரத்தன் டாடாவின் காரே இல்லை என்பது தெரியவந்தது. வேறு யாரோ தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து ...
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்

ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்... ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் பொதுவாக ஒரு கட்டிடம் கட்டப்படும் போது பல ஆண்டுகள் உறுதியாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கட்டுவார்கள். ஆனால் ஸ்வீடன் நாட்டில் உள்ள இந்த கட்டிடம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் கட்டப்படும் சில மாதங்களில் ஆற்றில் சென்றுவிடும் மீண்டும் அடுத்த ஆண்டு அதே போலக் கட்டப்படும். ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் என்ற கட்டிடம் தான் நாம் மேலே சொன்ன கட்டிடம். இந்த கட்டிடம் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் கட்டமைக்கப்படும். தொடர்ந்து 5 மாதங்கள் செயல்படும் இந்த ஓட்டல் மீண்டும் கரைந்து ஆறாக ஓடிவிடும். பின்பும் மீண்டும் அடுத்த குளிர் காலத்தில் கட்டப்படும். இவ்வாறாகக் கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து 32வது ஆண்டாக தற்போது இந...
கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்! பொதுவாக இங்கு உள்ள இளைஞர்கள் காதலிக்கும் காதலிக்கும் பெண்களிடம் காதலை வெளிபடுத்த பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட்,கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பிசியான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடன் காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். இத்தாலி நாட்டில் உள்ள புக்லியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே, கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது அயராத பணிக்கு மத்தியில் காதலிக்...
2021 சட்டமன்ற தேர்தல்… அதிமுகவில்  யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு

2021 சட்டமன்ற தேர்தல்… அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      2021 சட்டமன்ற தேர்தல்... அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கெல்லாம் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கலாம், யாரையெல்லாம் விலக்கி வைக்கலாம் என்று பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது உறுதி என சொல்லப்படுகிறது. டெல்டாவை பொறுத்தவரை ஓ.எஸ்.மணியன் முதல்வருக்கு அபிமானமுள்ள நபராக இருக்கிறார். அதே போல் அதிமுக மீது எந்த குற்றச்சாட்டு வைத்தாலும் சளைக்காமல் பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அமைச்சராவது உறுதி என்றே சொல்லப்படுகிறது ஏனென்றால் எல்லா தரப்பினருக்கும் அவர் முதல்வர் இடத்தில் இருந்து கொண்டு பதில் சொல்லி வருகிறார். அதே  போல் சமூக ர...
உருமாறிய கொரோனா பிப்ரவரி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம்!

உருமாறிய கொரோனா பிப்ரவரி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சீனாவில் தொடங்கிய கொரோனா பரவலில் இருந்தே இன்னமும் உலக நாடுகள் மீளாத நிலையில் இங்கிலாந்தில் உருவான புதிய வகை  உருமாறிய கொரோனா காரணமாக பிப்ரவரி மாதம்  வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக 2வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும்  துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக்குறிப்பில் முந்தைய கொரோனா பரவலை காட்டிலும் மிக வேகமாகவும், அதி தீவிரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உருமாறிய கொரோனா  பரவி வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தி...