தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது: “வழிபாட்டு தலங்கள், திரையங்குகள் திறப்பது குறித்து வரும் 8-ம் தேதிக்கு மேல் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் நாளைய தினம் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்.
புகைப்பிடித்தல், புகையிலை போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டாலும், அது போன்ற காட்சி வந்தாலும் அதன் தீமைகள் குறித்து குறிப்பிட்டு தான் வெளியிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தீமை பற்றி குறிப்பிடமால் விளம்பரம் வெளியிடும் நிலை தமிழகத்தில் இல்லை.
சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு உத்தரவு வழங்கியது. ஒரு தொடருக்கு ஒரு முறை அனுமதி வாங்கினால்...









