செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பாலித்தீன் பைகளில் வழங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன. தேவஸ் தான நிர்வாகம் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பைகள் பச்சை மேஜிக் பைகள் என அழைக்கப்படுகிறது...
அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்!

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      *அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம்...- சசிகலா கடிதம் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா கடிதம் ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில் அதிமுகவின் வெற்றி பயணம் தொடரவேண்டும் : ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம் : லா வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா ? தடி ஊன்றியாவது எழுவிட மாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர் : ஜெயலலிதாவுடனான 33ஆண்டு பயணத்தை நினைத்தே வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறங்கிவிடக்கூடாது என்ற அக்கறை, தொண்டர்களின் கட்டளையால் பொதுவாழ்வு என்ற வேள்வியில் என...
பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பாஸ்போர்ட் கட்டாயமில்லை...போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் - துபாய் அதிரடி துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் விவகாரத்துறையின் பொது இயக்குனகரத்தின் இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:- துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகத்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது துபாய் முனையம் எண் 3 வழியாக பயணம் செய்யும் போது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏற்கனவே இந்த வசதியானது சோதனை முறையில் செய்யப்பட்டிருந்தது. தற்போது நேற்று முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது. ...
தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics
  5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிப்23ல் ஆலோசனை எனத் தகவல். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக செவ்வாயன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது....
நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின் அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது....
ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
    ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு "வாய்ஸ்" வருமா? தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது நண்பரும் நடிகருமான ரஜனிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் இல்லை என கூறப்பட்ட நிலையில் ரஜினியை திடீரென கமல் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கமல் எந்த கூட்டணியிலும் இணையவில்லை. ரஜினியை சந்தித்து தனது கட்சிக்கு வாய்ஸ் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது....
ஜோதிமணி MP திடீர் கைது!

ஜோதிமணி MP திடீர் கைது!

HOME SLIDER, NEWS, politics
    கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 70 ஆண்டுகள் பழமையான சிலையை அகற்றிவிட்டு, முதல்வர் புதிதாக திறப்பதற்காக அவசரகதியில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்....
நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘மாறா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நடிகராக மட்டுமல்லாது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார் மாதவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகி வ...
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை  உத்தரவு

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு

HOME SLIDER, NEWS, politics
  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார். இதற்கிடையே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவந்தரராஜன் உத்தரவிட்டுள்...
தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டுபிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டுவந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தலைவர் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலைவரின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன், சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்று தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்....