“காவல்துறையில் கோட்சே வாரிசுகள்” திருமாவளவன் அறிக்கை
காந்தி நினைவுநாளில் கோவையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது அங்கு வந்த காவல்துறையினர் அதனைத் தடுத்துள்ளனர் என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
இது அதிகார வரம்புமீறல் என்றும், காவல்துறையில் கோட்சே வாரிசுகள் என்றும் குறிப்பிட்டு, இது குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவு நாளையொட்டி கோவையில் 'மக்கள் ஒற்றுமை மேடை' என்னும்அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர்.
காந்தியைக் கொன்றத...









