திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து  நூதன தண்டனை!

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து நூதன தண்டனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருத்தணி காந்தி ரோட்டில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றித் வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பிளஸ்- 1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் திருத்தணி மலைக் கோவிலில் சுற்றி திரிந்தனர். அப்போது மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடத்த வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அந்த மாணவர்களிடம் விசாரித்தார். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் சுற்றிதிரிந்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் 3 பேருக்கும் 15 முறை தோப்புகரணம் போடும்படி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது. ஒருவர...
குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன்!

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன் நடிகர் சாய் தீனா. நடிகர் கமல் ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடிச்சு கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் தீனா. அதன் பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடிச்சிருக்கார். எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். நடிப்பையும் தாண்டி தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்காய்ங்க. மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செஞ்சு வந்தார். வில்லன் என்பவன் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை தெறிக்கும். இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்தினர...
”அரசியல் செய்ய நான் காசிக்கு போகவில்லை” 11 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்திய பின் விஷால் பேச்சு!

”அரசியல் செய்ய நான் காசிக்கு போகவில்லை” 11 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்திய பின் விஷால் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ”அரசியல் செய்ய நான் காசிக்கு போகவில்லை” 10 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்திய பின் விஷால் பேச்சு! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று  11 ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலையுடன் சீர்வரிசையோடு இலவச திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது: இங்கு வந்திருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும், திருமணம் ஆன 11 தம்பதிகளுக்கும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய என் தம்பி கண்ணனுக்கும், மற்ற மாநில செயலாளர்கள் அத்துணை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநகராட்சி ஊழியர்ர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹரி, கண்ணன் மற்றும் 22 பேருக்கும் நன்றி. ஏனென்றால் எனக்கு பட்டு வேஷ்டி சட்டை அணிவது...
வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி- அரையிறுதிக்குள் நுழைகிறது பாகிஸ்தான் !

வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி- அரையிறுதிக்குள் நுழைகிறது பாகிஸ்தான் !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்-1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா தகுதி பெற்றுவிட்டது. குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் டில் தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களம் இறங்கின. டாஸ் ஜெயித்த வங்காள தேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர். லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய நஜ்முல் ஹாசைன் அரை சதம் அடித்ததும் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை இப்திகார் முகம்மது கைப்பற்றினார். இந்த ஆட்டத்தின் முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர்...
குஜராத் சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று பிரசாரம்!

குஜராத் சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
குஜராத் சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது. இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன. இம்முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இம்முறையும...
பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் அவர்களின் நினைவுநாள் Dr.திருமாவளவன் MP அஞ்சலி

பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் அவர்களின் நினைவுநாள் Dr.திருமாவளவன் MP அஞ்சலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியைசாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துஇந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். 1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அண்ணன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ அரசியல் பிரிவின் தலைவரானார். அதோடு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரி...
நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் மோடி பதில்!

நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் மோடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தன் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார். அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பர...
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்!

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார். முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது....
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,692 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் நீர் மட்டம் 19 அடியை நெருங்கி உள்ளது. ஏரியில் 18.42 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் புழல் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புழல் ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெ...
மீனவர்கள் குடிசைக்குள் கடல் நீர் புகுந்ததால் கடலோர மக்கள் அவதி!

மீனவர்கள் குடிசைக்குள் கடல் நீர் புகுந்ததால் கடலோர மக்கள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடந்த 2 நாட்களாக வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் வடகடல் மற்றும் தென் கடல் பகுதிகளில் கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகின்றன. கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை தாண்டி ராட்சத அலைகள் அடித்து வருகிறது. இதன் தாக்கமாக பாம்பன் வடக்கு பகுதியில் கடல் கரையோரங்களில் அமைந்துள்ள மீனவர்களின் குடிசைகளில் கடல் நீர் ஏறி கூரையால் அமைக்கப்பட்ட வேலிகள் சேதமடைந்தன. குடிசை வீட்டிற்குள்ளும் கடல் நீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....