ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!

மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது! மதுரை என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரையை எரித்த கண்ணகியும், கோவலனும், சிலப்பதிகாரமும் இந்த வரலாற்று சம்பவங்களை நினைவு படுத்தும் விதமாக மதுரை போலீஸ் எஸ்.பி.அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:- வணிகம் செய்ய மதுரை வந்த கோவலனும், கண்ணகியும் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர். இங்கிருந்து தான் அதாவது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் வழியாக தான் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்க சென்றார். இதனால் சிலப்பதிகார பூங்கா உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது. மதுரையை பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு...
ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    8 முதல் 12ம் வகுப்புகள் ஜூலையில் தொடங்கலாம்! மனித வள மேம்பாட்டு துறையிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த குழு தனது அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறையிடம் அளித்துள்ளது. அதன்படி பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது. ...
ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்! கொரானா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் உள்ள 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 770 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.7.63 கோடி அபராதம்...
கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு... 3 மாசம் சிறை...! தலைப்பை பார்த்ததும் ஷாக் ஆக வேண்டாம்... இது நம்மூரில் இல்லை. வெளிநாட்டு விவகாரம்... கொரானா வைரஸ் பரவியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மிகவும் முக்கியமான மருத்துவ உபகரணமாக செயல்பட்டு வருகிறது. கொரானா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், உலகின் பல்வேறு நாடுகள் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அதை கொள்முதல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரானா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர் ...
உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!!

உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!! தமிழகத்தில் நாள்தோறும் கொரானா பாதிப்பு குறையாமல் உயர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக வெளி மாநில போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளூர் விமான சேவையை மத்திய அரசு நேற்று முதல் தொடங்கியது. முதலில் விமான சேவை 31ம் தேதி வரை தொடங்க வேண்டாம் என்ற தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும...
விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி… குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை!

விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி… குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி... குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை! கொரானா பாதிப்பு காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற பல மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர். விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டது. இதனால் குழப்பம் நிலவியது. அதே நேரம் பயண டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த 82 விமானங்கள்...
சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மன்னர் to LIC ஏஜெண்டான சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்! நாடு சுதந்திரம் அடைந்த பின் மன்னர்கள், அரசர்கள், ராஜாக்கள், இளவரசர், இளவரசி என்பதை எல்லாம் வரலாற்று பதிவுகளில் மட்டுமே படித்து வருகிறோம். அதையும் மீறி சம காலத்தில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் தகவல்களையும், வளைகுடா மன்னர் குடும்பங்கள் பற்றியும் அறிந்த நமக்கு நம்மூரில் இருக்கும் ராஜாக்கள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் சோகம். அப்படி நம்மூரில் இருந்த கடைசி ராஜாதான் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி ஜமீனை ஆண்டுவந்தவர் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. தமிழகத்தில் மன்னராட்சியில் ராஜாவாக முறைப்படி பட்டம் சூட்டிக் கொண்டவர்களில் மிஞ்சி இருந்த ஒரே ஒரு ராஜா இவர் தான். தமிழ்நாட்டில் மன்னராட்சி...
வெளிநாடு வாழ் இந்தியரா… தாயகம் திரும்பனுமா… இத படிங்க

வெளிநாடு வாழ் இந்தியரா… தாயகம் திரும்பனுமா… இத படிங்க

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வெளிநாடு வாழ் இந்தியரா... தாயகம் திரும்பனுமா... இத படிங்க வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள், முதலில் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கட்டாய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப முன்னுரிமை அளிக்கப்படும். வேலை இழந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள், குடும்ப உறுப்பினரின் இறப்புக்கு செல்பவர்கள், விசா முடிவடையும் நிலையில் இருப்பவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதியோர், மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயண செலவை அவர்களே ஏற்க வேண்டும். அதுபோல், இந்தியா திரும்பிய பிறகு, சுகாதார அமைச்சகம் வகுத்த அனைத்து நெறிமு...
உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது... 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார். பலி எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் இப்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பல லட்சம் மனிதர்களை பலி வாங்கி வருகிறது.   இந்நிலையில், உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரம் வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரானாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரானா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரசால் அதிகம் பாதிப்பு...
கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு முடிவதற்கு முன் கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிக்கூடங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ்-2 பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திரு...