ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சட்டம் எல்லாருக்கும் பொதுவானது… வடக்குக்கு ஒரு நீதி… தெற்குக்கு ஒரு நீதியா… பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி

சட்டம் எல்லாருக்கும் பொதுவானது… வடக்குக்கு ஒரு நீதி… தெற்குக்கு ஒரு நீதியா… பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சட்டம் எல்லாருக்கும் பொதுவானது... வடக்குக்கு ஒரு நீதி... தெற்குக்கு ஒரு நீதியா... பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: ''நான், ஆர்.பி.ரவிச்சந்திரன், தமிழகத்தில், மதுரை மத்திய சிறையில் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நாங்கள் என்றோ ஒருநாள் விடுதலை பெறுவோம் என்று காத்திருக்கிறோம். 8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சி சாதிக்கப் பாடுபடும் ஒ...
அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் சில படங்கள் திரையுலகை தாண்டி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கு பல உதாரணம் இருந்தாலும் சமீபத்திய பரபரப்புக்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரித்த அசுரன் படம். இந்த படத்தில் பஞ்சமி நில மீட்பு குறித்து வெற்றிமாறன் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே திமுக தலைவர் ஸ்டாலின் அந்த அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தி இருந்தார். அப்போது பஞ்சமி நில மீட்பு குறித்த கருத்தை வரவேற்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்து ஒரு பதிவு போட பரபரப்பு அதிகமானது. அதில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமும் பஞ்சமி நிலம்தான் அதையும் உரியவர்களிடம் திருப்பினால் நல்லது என்று ராமதாஸ் பதிவு போட அதற்கு ஸ்டாலின் பதில் சவால் விட்டிருக்கிறார். அதில், "மருத்...
விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..! விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது. இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார். இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்… அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..!

விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்… அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்... அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..   அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கை அவரே வாபஸ் பெற்றார். இந்த நிலையில் மீண்டும் செல்வா கதை திருட்டு விவகாரத்தை கையில் எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையத...
உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை! உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 என்ற படத்தின் மூலமாக கதை நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்தியாவிலேயே 87 வயதில் கதை நாயகனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் தாதா87. அதிக வயதான நடிகர்களில் உலக அளவில் சாருஹாசன் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் நடித்த தாதா87 படமும் திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றி பரபரப்பான கருத்தை பதிவு செய்திருந்தது. இப்போது சாருஹாசன் பிசியான நடிகராக மாறியிருக்கிறார். பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய அரசு கலைத்துறையை சேர்ந்த பலருக்கு அவர்களின் சாதனையை கவுரவிக்கும் வகையில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது. 90 வயதிலும் பிசியான ந...
சீன அதிபர் – பிரதமர் மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – புதுத்தகவல்…!*

சீன அதிபர் – பிரதமர் மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – புதுத்தகவல்…!*

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *சீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – வியக்க வைக்கும் தகவல்…!* சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பம் சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டபடி இருவரும் பேசி வருகின்றனர். மோடி – ஜின்பிங் சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்துள்ளதால் இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடுவார்கள். இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருக்கின்றனர். அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர்.மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். மது சுதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் (அரசியல்) ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் ...
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர...
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி  மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள கடப்பாக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஈச்சம்பாக்கம் பகுதியில் இருந்து புதுப்பட்டினம் வரையிலும் உள்ள கிராம மக்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் அவர் கட்டாயம் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கடல...
விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு! சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறை...
தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி இப்போது பிசியாக மும்பையில் நடித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய பிறகு அரசியலுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக ரஜொனி தரப்பு எடுத்து வருவதாக கூறப்புடுகிறது. 2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்… அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி.. இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது.. யார் இந்த பிரசாந்த் கிஷோர்... அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் , பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தே...