ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக !

குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக ! கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிஜேபியின் அரசியல் சித்து விளையாட்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. முதல்வர் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிய பலன் உடனடி தீர்வாக அமைந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு 6 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் குமாரசாமி வழங்கினார். கவர்னரும் குமாரசாமி ராஜினாமாவை ஏ...
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..! இந்திய திரையுலகம் இப்போது வாழக்கை வரலாற்றுப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அதிகமாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது. அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு 800 என பேர் வைத்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடை பெற உள்ளது. அதோடு இந்தியா முதல் உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 83 என்ற பெயரி...
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் - வைகோ பாராட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்கார குரல் எழுந்தது. சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத்துரோக வழக்குகளின் பணி சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது எனது மனதை காயப்படுத்துகிறது. நடிகர் சூர்யாவின்...
சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சாட்டை சுழற்றும் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரம் சூர்யா கருத்தை வரவேற்று மத்திய அரசை மறைமுகமாக எதிர்த்த ரஜினி..! நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் இன்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது: தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. புதிய கல்வி கொள்கை விஷயத்தில் சூர்யா பேசிய கருத்து சரிதான். அவருடைய பேச்சுக்கு என் ஆதரவு உண்டு. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா. அதே போல இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது. கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 நிச்சய...
வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வெனிஸ் நகருக்கு சுற்றுலா போன இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி வெளியேற்றம்..! இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த ஜோடி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சுற்றுலா சென்றிருந்தது. அந்த ஜோடி அங்குள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்துக்கொண்டிருந்தனர். இப்படி பொது இடத்தில் நடந்து கொள்வது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும். இதை பார்த்த சிலர் அங்குள்ள மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து காபி குடித்த ஜோடியை பிடித்து அதிகாரிகள் 853 பவுண்ட் அபராதம் (சுமார் ரூ.75 ஆயிரம்) விதித்தனர். அத்துடன் அவர்களை உடனடியாக அந்த நகரில் இருந்தும் வெளியேற்றினர். கா...
திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க... தேவஸ்தானம் புது முடிவு..! 10 ஆயிரம் நன்கொடை கொடுத்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைக்க புதிதாக உருவாக்கப்பட “ஸ்ரீ வாணி” டிரஸ்டுக்கு ரூ. 10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கப்படும் என ஆந்திராவில் புதிதாக அமைந்த ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், டிரஸ்ட்டின் நன்கொடையை அதிகரிக்கவும் இந்த திட்டம் கொண்டு வர...
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..? மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எதிர்க் கட்சிகளை தாண்டி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக சூர்யா மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு நிதி தரும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் புதிய கல்வி கொள்கையை கடுமையாக சூர்யா விமர்சித்தார். அதோடு, பல கிராமத்தில் பள்ளிக்கூடங்களில் அடிப்படை விஷயங்களே இல்லை இதில் புதிய கல்வி கொள்கை ரொம்ப அவசியமா என பொருள் படும் வகையில் கடும் வாதத்தை முன் வைத்தார். அதற்கு முன் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள அவலம் தோலுரிக்கப் பட்டிருந்தது. அந்த விழாவிலும் நீட் தமிழகத்தில் தேவையா என கேள்வி எழுப்பி இருந்தார் ஜோதிகா. இ...
கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..! தனது கல்வி கொள்கை கண்டனப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு நேரத்தில் ஆதரித்து குரல் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
12 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம்..!

12 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காமராஜர் மணிமண்டபம் ரூ.25 கோடி செலவில் 12ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.   விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்....
வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு… அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..!

வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு… அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு... அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..! திருப்பதியில் விஐபி நுழைவு என்னும் சிறப்பு வசதி மூலம் வரிசையில் நிற்காமல் ஏழுமலையானை தரிசிக்கும் முறையை நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று மணி கணக்காக, நாள் கணக்காக வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். ஆனால் பணம் படைத்த சிலர் ஒரு சில கணிசமான தொகையை செலுத்தி விஐபி பாஸ் என்ற பெயரில் குறுக்கு வழியில் எளிதாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். சாமி கும்பிடுவதில் கூட ஏழைக்கு ஒரு சலுகை, பணமிருப்பவருக்கு ஒரு சலுகையா என பொதுமக்கள் இதனால் குறைப்பட்டு கொள்கிறார்கள். மேலும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் உறவினர்கள் என பலர் இந்த விஐபி பாஸை தங்கள் சுய தேவைக்கு...