சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு சமீபத்திய தேர்தலில் இமாலய வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக முக்கிய இடத்தை ப...
தேர்தல் படுதோல்வி- 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

தேர்தல் படுதோல்வி- 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இதேபோல் பல்வேறு முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் தோல்வியைத் தழுவினர். தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். உத்தர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநில தலைவர்களைத் தொடர்ந்து, பஞ்சாப், அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை 6 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், மேலும் சில மாநில தலைவர்கள் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது....
எப்போதும் கேப்டன் டோனிதான் – சுரேஷ் ரெய்னா

எப்போதும் கேப்டன் டோனிதான் – சுரேஷ் ரெய்னா

HOME SLIDER, NEWS, செய்திகள்
  எப்போதும் கேப்டன் டோனிதான் - சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் தலை சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து 2017-ல் இருந்து பதவி விலகினார். என்றாலும் எப்போதும் அவர்தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘வீரர்கள் பெயர் அடங்கிய பேப்பரில் டோனி கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைதானத்தில் விராட் கோலிக்காக எம்எஸ் டோனிதான் கேப்டன். ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பந்து வீச்சாளர்களை வழிநடத்தும் அவருடைய பணி இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது....
எனக்கு இன்னொரு முகம் இருக்கு தோற்றாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும் – கட்சியினருக்கு கமல் கட்டளை

எனக்கு இன்னொரு முகம் இருக்கு தோற்றாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும் – கட்சியினருக்கு கமல் கட்டளை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
எம்பி தேர்தல்களில் தோல்வி தழுவி இருந்தாலும் சுமார் 4 சதவீதம் ஓட்டு வாங்கி அனைவர் பார்வையில் சிக்கியவர் கமல்.     மக்கள் நீதி மய்யம் கட்சியின்  ஆலோசனை கூட்டத்தில்  கமல் பேசும்போது, நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம். அதற்கான காரணம் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். தேர்தல்தான் முடிந்துவிட்டதே... இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள். மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் குறையைக் கேட்டு செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார். மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன்,...
தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து  மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!   நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் வருகின்ற 30 தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்ற தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததுமே ரஜினிகாந்த் தனது சமூக வலைதளம் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விழாவுக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை விழாவில் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ரஜினிகாந்த் இப்போது நடித்து ...
மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்

மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் - காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்   நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் மாபெரும் தோல்வியை தழுவியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தோல்விக்கு காரணங்கள் என்ன என்று விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் தரப்பில் செய்த தவறுகள் குறித்தும் ராகுல் காந்தி கடும் ஆவேசமாக பேசியிருக்கிறார். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த ராகுலின் முடிவை மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். தேர்தலில் படுதோல்வி அடைந்தத...
நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பறந்து கொண்டிருந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கி முன்னாள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள்..! இந்தியாவில் உள் நாட்டு விமான சேவையில் அதிகம் பங்கு வகித்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போது கடும் கடன் நெருக்கடியில் உள்ளது. விமான பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வருவாய் இல்லாமல் பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் பதவியை நரேஷ் கோயல் திடீரென ராஜினாமா செய்தார். மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டதன் பேரில் நரேஷ் கோயல் ராஜினாமா செய்தார் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதா கோயலும் மும்பையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல விமானம் ஏறினார்கள். விமானம் ரன்வேயில் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் விமான நிலைய கட்டு...
தமிழக காங்.,எம்.எல்.ஏ., வசந்தகுமார் இன்று ராஜினாமா ..!

தமிழக காங்.,எம்.எல்.ஏ., வசந்தகுமார் இன்று ராஜினாமா ..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலம் ஒன்று குறைகிறது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., வசந்தகுமார் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். பாஜக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்தகுமார் அபார வெற்றி பெற்றார். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பதவியில் இருக்க முடியாது. இதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்கிறார். முன்னதாக கூட்டணி கட்சித் தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து எம்.பி. ஆனதற்கு வாழ்த்து பெற்ற பின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் தகவலை சொன்னார். இதையடுத்து வசந்தகுமார் இன்று தனது நாங்குநேரி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் ராஜினாமா செய்வ...
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்..!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல். ஏக்கள் நாளை 28ம் தேதி பதவியேற்கவுள்ளனர். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் 13 திமுக எம்.எல். ஏக்களும் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கின்றனர். எம்.எல். ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்கிறார்கள். நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் பலம் 118 ஆகவும், திமுக கூட்டணி பலம் 111 ஆகவும் உயர்ந்துள்ளது....
2ம் முறையாக பிரதமராக வெற்றி பெற்ற மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து..!

2ம் முறையாக பிரதமராக வெற்றி பெற்ற மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பல்வேறு நாடுகளில் உள்ள உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார்கள். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கல், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொலைபேசியில் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்....