காவிரி விவகாரம்: டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் அறிவிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமெனக் கடந்த மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்காகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகத் தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நேற்று (மார்ச் 17) அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீத...









