மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்…
மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரானா பரவல் விவகாரம், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசித்தார்.
வரப்போகும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், கொரானா பரவல் மற்றும் லடாக் எல்லை மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றியும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
கூட்டத்தில் பேசிய எம்.பி.க் கள், லடாக் மோதல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற மழைக் கால கூட்டத...









