மதிமுகவைப் போலவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் – திருமாவளவன் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவைப் போலவே நாங்களும் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு.
ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் அதிமுகவும், 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லாத வெறியை தீர்த்துக் கொள்ள திமுகவும் முயன்று வருகின்றன.
ஜெயலலிதா இல்லாத நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக இந்தத் தேர்தலை சந்திக்கிறது. அதேபோல, கருணாநிதி இல்லாத திமுகவை, வடநாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் துணையுடன் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார்.
அதன்படி, திமுக குறைந்தபட்சம் 180 முதல் 190 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்,...








