தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்
"தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்"
அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி,
சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வ...









