சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...
சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.   நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரபா அத்ரே, ராதேஷ்யம் கேம்கா, கல்யாண் சிங் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பிரபல பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் கலை ச...
பொதுவெளியில் அசிங்கமாக பேசிவிட்டு, பத்திரிகையாளரிடம் ரகசியமாக செல்போனில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்!

பொதுவெளியில் அசிங்கமாக பேசிவிட்டு, பத்திரிகையாளரிடம் ரகசியமாக செல்போனில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிருபரை அசிங்கமாகத் திட்டியது மைக்கில் கேட்டு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நுகர்வோர் விலைகள் டிசம்பரில் திடமாக அதிகரித்தன, இதனால் பணவீக்கம் அதிகரித்தது. இது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் காலக்கட்டத்தில் பணவீக்கத்தில் மிகப்பெரிய வருடாந்திர உயர்வு ஆகும், இது உச்சமாகும். இதைத்தான் அந்த நிருபர் பைடனிடம் கேள்வி எழுப்பினார், பணவீக்கம் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்றார். பைடனின் காம்படிஷன் கவுன்சில் கூட்டத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டபோது, ​​ வெள்ளை மாளிகை நிருபர் பீட்டர் டூசி, பணவீக்கம் பற்றி கேட்பது சரியா என்றும் அது அரசியல் கடன் தானா என்றும் கேட்டார். பணவீக்கம் குறித்த நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த ஜோ பைடன் ” “பணவீக்கம் ஒரு பெரிய சொத்து,...
தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்   மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார். செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந...
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது. பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.   இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் சிறப்பாக பணிகளை செய்தல் குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் மத்திய அரசின் மூலம் வரையறுக்கப் பட்ட திறநளவிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் அரசால் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெ...
விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

விஜய் குறித்து தனி நீதிபதி அளித்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
    தனி நீதிபதி கூறிய கருத்துக்ளை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த கருத்துகளை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய், லண்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை வாங்கினார். இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தியிருந்தார். இருப்பினும், அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது, வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு கூறப்பட்டது. இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை நடிகர் விஜய் செலுத்த மறுத்திருந்தார்.   எனினும், நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிகத்துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொ...
இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்கள் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு! வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி படகுகள் ஏலம் விடுவது குறித்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது...
ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி சர்ச்சை நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு?!

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி சர்ச்சை நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
    லண்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை நடிகர் விஜய் வாங்கினார். இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தினார். இருப்பினும் அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு சொல்லப்பட்டது. இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை செலுத்த மறுத்தார் விஜய். இருப்பினும் நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிக துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 20 % வரியை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதே ஆண்டில் வரியை செலுத்தி விஜய...
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
    வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் பொறுப் பேற்றுக் கொண்டார். திமுக தலைமை நிலையச் செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் நேற்று கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன், “வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு முதல்வ...