தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்!
தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்!
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2021- 22-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் தொழில் துறை தொடர்பான முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை மேற்கொண்டு வருகிறது. இது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் 2021- 22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் அ.தி.மு.க. அரசு இடைக்கால ப...









