ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையில் கைது செய்யபட்ட சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையில் கைது செய்யபட்ட சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையில் கைது செய்யபட்ட சிறப்பு எஸ்.ஐ. பால் துரை கொரானாவால் பலி! சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பால்துரை உயிரிழந்தார் என தகவல் வெளியாகியது....
பாதுகாப்புத் துறைக்கு துப்பாக்கி,ரேடார் உட்பட 101 பொருட்கள் இறக்குமதிக்கு திடீர் தடை… கட்டுப்பாடுகள்!

பாதுகாப்புத் துறைக்கு துப்பாக்கி,ரேடார் உட்பட 101 பொருட்கள் இறக்குமதிக்கு திடீர் தடை… கட்டுப்பாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய பாதுகாப்பு துறையில் ரேடார், துப்பாக்கி உட்பட 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு.   இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு சுயசார்பு-இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனடிப்படையில் வெளிநாட்டில் இருந்து பாதுக்காப்புத்துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை, அரசு ஆகியவை ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துத்துள்ளதாக தெரிவித்துள்ளார்....
இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!

இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தி தெரியாது என்றதால் "நீங்கள் இந்தியரா?" என கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்டு சர்ச்சையை எழுப்பிய விமான நிலைய பெண் அதிகாரி! டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி, இந்த விஷயத்தை பதிவிட்டு, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார். இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ...
ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி!

ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி! திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சி.எம்.சிவபாபு, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் அழைத்துச் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளதாகவும், ஊரடங்குக்கு பின், பள்ளிக்கூடம் திறந்தால் இந்த மாணவர்கள் எல்லாம் படிக்கச் செல்வது கேள்வி குறியாக உள்ளது என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, அவினாசியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் பள்ளி மாணவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதிகளுக்கு த...
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார். லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானாலும் பாகுபலி படம் தான் ராணாவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரானா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட நாளான இன்று ராணாவுக்கும் மஹிமாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. சக நடிகர் நடிகைகள் திரையுலக பி...
நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  *தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* *அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!* நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.   சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் ...
அயோத்தியில் உருவாகும் இலவச பாபர் மருத்துவமனை உருவாகிறது!

அயோத்தியில் உருவாகும் இலவச பாபர் மருத்துவமனை உருவாகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை* ! *நீதி மன்றத்தின் உத்தரவின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர் மருத்துவமனை கட்ட வாரியம் முடிவு*... *இலவசமாக செயல்படும் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கும் பொருப்பு மற்றும் தலைமை மருத்துவராக டாக்டர் கபில்கான் அவர்களை நியமனம் செய்யபடும்* ... *AIIMS மருத்தவ மனையைவிட பிரம்மாண்டம் செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு*...!!...
கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
துபாயில் இருந்து கேரளா வந்த சிறப்பு விமானம் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் அர...
கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்! வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை டி.ஜ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது கர்நாடகம், தமிழகம் தாண்டி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஓய்வு ...
6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்! லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில், துறைமுக சேமிப்பு...