போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்துவது குறித்த விசாரணையை கைவிடக்கோரி அவரது அண்ணன் மகன் தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், விசாரணையை கைவிட்டு, சாவியை தன்னிடம் தருமாறு தீபக் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதில், தனது பாட்டி சந்தியா போயஸ் தோட்ட வீட்டை வாங்கினார் என்றும், நினைவில்லம் அமைப்பது தொடர்பாக தான் மற்றும் தனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த ந...
சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.ப...
குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!
வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.
குஜராத்தில் ராஜ்கோட்டில் இன்று காலை 7:40 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ தூரத்தில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.
இந்த மாதம் மேற்கு மாநிலத்தை தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜூலை 5 ம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் இன்று பதிவாகியுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 7:57 மணிக்கு அசாமில் க...
இந்தியாவில் வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேற்றம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிக வேகமாக இருக்கிறது.
இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு என்பது அதிர வைப்பதாக அமைந்திருக்கிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றுதான், இந்த பரவலை தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
இந்தியாவில் இப்போது 2 தடுப்பூசிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கி உள்ளன.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரானா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள...
கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக போயஸ் கார்டன் போன தீபக்...
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவருடைய மறைவுக்கு பிறகு, இந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் இந்த வீடு கொண்டு வரப்பட்டு வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வீட்டுக்கான சட்டபூர்வமான முதல் நிலை வாரிசாக தீபா மற்றும் தீபக் என்று அறிவித்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார். அங்கு காவல் பணியில் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இருந்தார். அவரிடம் தீபக், ‘...
முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா!
உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது. இந்தியாவிலும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரானா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றதால் 2-ம் கட்ட பரிசோதனைக்கு ரஷ்யா தயாராகி உள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:-
தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வரு...
109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்.*
*சச்சின் பைலட் மற்றும் இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், ஆளுநருடன் அசோக் கெலாட் சந்திப்பு..
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட் நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக கோவிந்த் சிங் தோதாஸ்ரா ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக நியமனம்...
செய்தி ஊடகஙகளை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்!
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீதர் முதலில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பின் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் சிறப்ப்பு எஸ்.ஐ. பால்துரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார்.
உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்....
சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரையும் கொடூரமாக போலீசார் அடித்து கொன்ற வழக்கு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ் வழக்கின் அனைத்து ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
விசாரணை வேட்டையில் இறங்கிய சிபிஐ சந்தேகமரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியது. மேலும், சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷை ஏ1 குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதோடு முக்கிய சர்ச்சை இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீதர் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொலை வழக்காக மாற்றியதோடு ஏ1, ஏ2 என குற்றவாளிகள் விவரத்தையும் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....