ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்!

குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    குறைந்த செலவில் டெல்லி ஐ.ஐ.டி தயாரித்த கொரானா தொற்று கண்டறியும் பி.சி.ஆர்.கிட்! உலகம் முழுதும் பரவி மக்களை கொடூரமாக பாதித்து உள்ள கொரானாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளும் விலை அதிகம் இருப்பதால் குறைந்த செலவில் வைரஸ் தொற்றை கண்டறிய ரேபிட் கிட் சீனாவில் இருந்து பல கோடி செலவில் வாங்கப்பட்டது. அப்படி வாங்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் சரியான முடிவுகளை காட்டால் தவறாக காட்டியதால் சீனாவின் மோசடியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரான்ஸ் உட்பட சில நாடுகளும் சீனாவின் இந்த மோசடி குறித்து புகார் எழுப்பி இருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பிசிஆர் கொரோனா சோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிட...
உண்மையை சொன்னால் சிறையா? அரசுக்கு கமல் கேள்வி

உண்மையை சொன்னால் சிறையா? அரசுக்கு கமல் கேள்வி

CINI NEWS, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    அரசின் அவலத்தை செய்தியாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இணைய ஊடக ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள் எனறு கூறியுள்ளார்.   https://twitter.com/ikamalhaasan/status/1253606497981837312?s=19...
பாரதி கண்ட புதுமைப்பெண் – ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

பாரதி கண்ட புதுமைப்பெண் – ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரைப் பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கொரானா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது. இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்- அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம். ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர். ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது? உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்...
பொதுமக்கள், கட்சி தொண்டர்களுக்கு மாஸ்க் “டாஸ்க்” கொடுத்த  விஜயகாந்த்!

பொதுமக்கள், கட்சி தொண்டர்களுக்கு மாஸ்க் “டாஸ்க்” கொடுத்த விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  முக கவசம் அணிந்த செல்பியை சமூக வலைதளங்கங்களில் பதிவிடுங்கள் பொதுமக்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்! நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது கட்சித் தொண்டர்கள், மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரானா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் அணியவேண்டும். பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் முககவ்சம் அணிந்து செல்பி எடுத்து உங்கள் போன் டிபியாகவும், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து முககவசம் அணியவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
கொரானா ஆபத்து புரியாமல் மக்கள் வெளியில் சுற்றுகிறார்களே – பிரபல நடிகர் வேதனை

கொரானா ஆபத்து புரியாமல் மக்கள் வெளியில் சுற்றுகிறார்களே – பிரபல நடிகர் வேதனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா ஆபத்து புரியாமல் மக்கள் வெளியில் சுற்றுகிறார்களே - நடிகர் வேதனை சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: கொரானா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கொரானாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய் சேர வேண்டும...
லாக்டவுன் நேரத்தில் இப்படியெல்லாம் வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க ப்ளீஸ் – குஷ்பு

லாக்டவுன் நேரத்தில் இப்படியெல்லாம் வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க ப்ளீஸ் – குஷ்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஒருவேளை உணவுக்கே மக்கள் திண்டாடும் போது இப்படி வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க - குஷ்பு வேண்டுகோள் கொரானா ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு திண்பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றனர். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, "லாக்டவுன் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே நாட்டில் பலரும் போராடும் நிலை இருப்பதால், இது போன்ற தருணத்தில் கண்ணுக்கு கவர்ச்சியாக கவரும் விதமான உணவு வகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது. ஏழை எளிய மக்கள் து...
அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் “செட்டப்பா” ?

அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் “செட்டப்பா” ?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் எப்போதும் தூக்கிப் பிடித்து ஆதரவு கோஷம் போடும் முதல் நபர் அர்னாப் கோஸ்வாமி. எதிர்க் கட்சியினரை எதிரி கட்சியாக பாவித்து தனது டிவியில் செய்தி வெளியிடுவது அர்னாப்பின் வழக்கம். நேற்றிரவு தான் இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டிய, நிலையில், இது அர்னாப் மீது அர்னாபே நடத்திய 'செட் அப்' தாக்குதல் என்று ரவி நாயர் என்ற பத்திரிகையாளர் சொல்லி இருப்பது சமூக வலைதளங்கங்களில் ட்ரெண்டிங்காகி வருது. அர்னாப், அவரது மனைவி மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர் சாமியபிரதா ரே ஆகியோர் காரில் நேற்று இரவு தங்களின் ஸ்டுடியோவில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அர்ன...
தனி மனித இடைவெளியில் 100 நாள் வேலை திட்டத்தை தொடங்கலாம் – அரசு அறிவிப்பு

தனி மனித இடைவெளியில் 100 நாள் வேலை திட்டத்தை தொடங்கலாம் – அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனி மனித இடைவெளியில் 100 நாள் வேலை திட்டத்தை தொடங்கலாம் - அரசு அறிவிப்பு தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். 100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள்  ஆகியவற்றை  மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவதற்கு ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவதற்கு ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நோய் எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு, கபசுர குடிநீர் அருந்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் திட்டமாக 'ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்து கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி கபசுர குடிநீரை வழங்கினார். கொரானாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம். நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரானாவுக்கு மருந்து அல்ல; எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என்று தமிழக அரசு விளக்கியுள்ளது. சென்னையில் கொரானா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங...
நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் – காங்.,காரிய கமிட்டியில் தீர்மானம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் – காங்.,காரிய கமிட்டியில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் - காங்.,காரிய கமிட்டியில் தீர்மானம் காங்கிரஸ் கட்சி சார்பாக டில்லியில் இன்று நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ’மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. கொரானாவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் ஊரடங்கின் வெற்றி உள்ளது’ எனக் கூறியுள்ளார். ...