ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சாகச பயணம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்....
அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த "யூனிவர்செல் லைவ் ரேடியோ’!! இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசை பிரியர்களை மகிழ்ச்சிபடுத்த அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்கி உள்ளது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் ரேடியோ சேவையை துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ரேடியோ சேவையை துவக்கி வைத்தார். இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யுனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில...
இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லியை அடுத்த ஈவிபி செட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குனர் முத்துராஜா பிரமாண்டமான செட் அமைத்து வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரமாண்டமான கிரேன் எதிர்பாராமல் அறுந்து விழுந்து ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அஜீத் நடிக்கும் வலிமை ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அஜீத் காயம் அடைந்தார். வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு முன...
ஹூகானில் உள்ள இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் ராணுவ விமானம்!

ஹூகானில் உள்ள இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் ராணுவ விமானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் உள்ள ஹூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், ஆயிரத்து 749 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க பல நாடுகளில் மருந்து கண்டுபிடிக்க கடும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஹூகான் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏற்கெனவே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் ஹூகானில் இருந்து 640 இந்தியர்கள் கடந்த 1 மற்றும் 2–ந் தேதிகளில் டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 406 பேர் டெல்லியில் உள்ள இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். மற்றவர்கள் அரியா...
கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!

கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி... சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்! சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இது வரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72,000 பேருக்கு மேல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ், நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால், ஹூபாய் மாகாணத்தின் ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை எரித்து சாம்பல் ஆக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்களில் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பதில் வைத்து  நோட்டுகளை அழிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாம். ஏற்கனவே இந்த மாகாணம் முழுதும் உள்ள எல்லைக்குள் யாரும் வரவோ வெளியேறவோ முடியாதபடி அரசு தடை ச...
6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!

6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  6 பிளஸ் 23 ஆண்டுகள்... அழகான மில்லியன் தருணங்கள்... காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா! காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டு காலம் காதலித்து, பின்னர் மணந்தார். இவர்களது திருமணம், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் எண்.10, ஜன்பத் இல்லத்தில் 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி நடந்தது. பிரியங்கா, ராபர்ட் வதேரா தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடினர். அதில் அவர், “ ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுக...
அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி – பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு

அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி – பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி - பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குஜராத் குருஷனஸ்வரப் தாஸ்ஜி என்ற சாமியாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள், கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அங்கே படிக்கும் 60 மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி காட்டுமிராண்டி தனமாக கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது என சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வி நிறுவனத்தின் இந்த அத்துமீறிய அயோக்கியத்...
CAA சட்டத்தால் பாதிப்பா… நிரூபித்தால் 1 கோடி ரொக்கம் தருதாம் தமிழக பாஜக!

CAA சட்டத்தால் பாதிப்பா… நிரூபித்தால் 1 கோடி ரொக்கம் தருதாம் தமிழக பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பகுதியில் CAA எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவியது. பின்னர்...
சச்சினுக்கு விளையாட்டில் புகழ் பெற்ற லாரியஸ் விருது… பெர்லின் விழாவில் கவுரவிப்பு!

சச்சினுக்கு விளையாட்டில் புகழ் பெற்ற லாரியஸ் விருது… பெர்லின் விழாவில் கவுரவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சச்சினுக்கு விளையாட்டில் புகழ் பெற்ற லாரியர்ஸ் விருது... பெர்லின் விழாவில் கவுரவிப்பு! விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்  இந்த விருதை வழங்கினார். விருது பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் சிறப்பு மி...
TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப் பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்