பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?!
நம்பிக்கை நாணயம் அற்றுப்போனதா தமிழ் திரையுலகம்...!
பைனான்சியர் அன்புச்செழியனை
ஏமாற்றினாரா சிவி.குமார்..?!
இரு கடன்... ஒரு செட்டில்மெண்ட்...
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நேர்மையான நடவடிக்கைகள்
ஒழிந்துபோய் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி குறை சொல்லி
அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிரபலம் என்ற போர்வையில்
ஒளிந்து கொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது.
சினிமா தொழில் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து
வந்த நிலை மாறி இப்போது நாக்கில் தேன் தடவி
அந்த தேனில் விஷம் வைக்கும் அதிர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்...
பிரபல இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிக்குமார்
மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் என்ற பைனான்சியரிடம் வாங்கிய
கடனை திருப்பி தராத நிலையில் ‘பைனான்சியர் அன்புச்செழியன்
மிக மோசமாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்கிறேன்’
என்று சசிக்குமாரி...







