இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்ப...
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் வம்சி.
விஜய் நடிப்பில் குடும்பக்கதையுள்ள படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணன், தங்கை உறவுகளின் பாசப் போராட்டக் களத்தை விவரிக்கும் இந்தக் கதை குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையை விஜய்க்கு அதிகரிக்கும் என்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படத்தில் முக்கியமான இடத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் படத்தின் பாடலையே ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தெரிகிறது.
அதன்படி 2002-ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடிதத "ஆல்தோட்ட பூபதி நானடா" என்ற பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்பாடலை மணிஷர்மா இசையமைத்திருந்ததால் அவரிடம் இது குறித்து பேச்சு வார்த்த...
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெள...
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது.
நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்ச...
பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1999-இல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர்.
அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்...
மாமனிதன் அழுத்தமானவன் - கோடங்கி விமர்சனம்
யதார்த்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி காயத்ரி, அனிகா, மானஸ்வி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமனிதன்.
ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் விஜய் சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசிக்கிறார். பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசைப்படுகிறார். அப்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். இதன் பின் விஜய் சேதுபதி ஆசை நிறைவேறியதா? மாமனிதனாக யாரை சொல்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.
2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய் சேதுபதி, அம்மாவாக காயத்ரி. இருவருமே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகள்களாக வரும் அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
வழக்க...
மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் - கோடங்கி விமர்சனம்
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் மாயோன்.படத்தை இயக்கியவர் என்.கிஷோர்.
சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேராடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை – இளையராஜா, ஒளிப்பதிவு ராம்பிரசாத், எடிட்டிங் – ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ், கலை-பாலசுப்ரமணியன், பாடல்கள்- இளையராஜா
பழைய கதை பாணியில் ஆன்மீகம் கலந்த சஸ்பென்ஸ் டெக்னாலஜி வைத்து, புதையல், ஆராய்ச்சி, கோயில் எல்லாம் கலந்து ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுக்க முயற்ச்சித்த இயக்குனர் கிஷோர் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாயோன் மலை என்ற பகுதியில் ஒரு பழங்காலக் கோயிலுக்குள்...
கோடங்கி விமர்சனம்
வேழம் வித்தியாசம்!
ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார்.
காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது.
7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க...
*அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.*
இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை.
எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும். அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும்.
அது போல் தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும்.
இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தி...