தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!
தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பட ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.
எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரானா லாக் டவுன் தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
புது படங்கள் திரையரங்குக...









