சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லியை அடுத்த ஈவிபி செட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குனர் முத்துராஜா பிரமாண்டமான செட் அமைத்து வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரமாண்டமான கிரேன் எதிர்பாராமல் அறுந்து விழுந்து ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அஜீத் நடிக்கும் வலிமை ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அஜீத் காயம் அடைந்தார். வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு முன...
என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று  ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது, இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும். மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார். இயக்குநர் கே.எ...
திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்... ஷாக் ஆன விஜய்! விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் அறிவித்த நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷூட்டிங் போனது. விஜய்சேதுபதி வில்லனாக மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம் வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம். அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளா...
அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்...?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை! நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் இணைந்திருக்கிறார் அஜீத். இந்த படத்தில் அஜீத் ஜோடி யார், வில்லன் யார் என்பதெல்லாம் அறிவிக்கப்படவில்லை. ஷூட்டிங் மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில் வலிமை ஷூட்டிங்கை 2 மாதம் தள்ளி வைத்து விட்டாராம் அஜீத். அஜீத் ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் குட்டி விமானங்களை இயக்கும் ஆர்வம் உள்ளவர். அதோடு பைக் ஓட்டுவது அஜீத்துக்கு ரொம்ப பிடிக்கும். வலிமை படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாம். அப்படி ஒரு காட்சி படமாக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதால்தான் வலிமை ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாம். ரசிகர்களும் கெட்வில் சூன் தல என சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர். அதே நேரம் அஜீத் காட்சிகள் முடிந்து மற்ற நடிகர்கள...
மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா - பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது. பாடலாசிரியர் விவேக் பேசியது... முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்...
நானும் கஞ்சா அடித்தவன் தான் – பாக்யராஜ் ஓப்பன் டாக்!

நானும் கஞ்சா அடித்தவன் தான் – பாக்யராஜ் ஓப்பன் டாக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  குறைந்த செலவில் எடுக்கப்படும் 'மரிஜுவானா' போல தரமான படங்கள் வெற்றியடைய வேண்டும் - இயக்குனர் மிஸ்கின் 3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி 'அட்டு' நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மரிஜுவானா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது, 'மரிஜுவானா' என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் 'மரிஜுவானா:. கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்கள...
ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் "அயலான்" கலாட்டா! ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏலியன் போன்ற உருவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் இருப்பது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூ...
தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது! தமிழ் சினிமாவின் சாபக்கேடு நல்ல திரைக்கதைகளோடு காத்திருக்கும் திறமையாளர்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்றவாறு "இணக்கமாக" படம் எடுப்பவர்களுக்கு மாநில விருது, தேசிய விருது மானியம் என பல சலுகைகளை வாரி வழங்கும் கேவலம்தான் கால காலமாக நடந்து வருகிறது. நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றார் என்றதும் அதன் உள் அரசியல் தெரியாமல் இந்தியாவே கொண்டாடியது. நிஜத்தில் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் இந்தியர்களை எந்தளவுக்கு தரம் தாழ்த்தி காட்ட முடியுமோ அந்தளவுக்கு கேவலப்படுத்தி அருவருப்பாக சித்தரித்து வேடிக்கை மனிதர்களாக காண்பித்திருப்பார்கள். இந்தியர்களை அத்தனை கேவலமாக சித்தரித்த அந்த படத்தில் பணியாற்றியதால் தான் ரஹ்மான் ஆஸ்கர் வ...
சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்..   நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது... நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்க...