புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

செல்போன் ஆபத்து… எச்சரிக்க வருகிறார் ஸ்மார்ட் போலீஸ் அதிகாரி காளிதாஸ்..!

செல்போன் ஆபத்து… எச்சரிக்க வருகிறார் ஸ்மார்ட் போலீஸ் அதிகாரி காளிதாஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    செல்போன் ஆபத்து... எச்சரிக்க வருகிறார் ஸ்மார்ட் போலீஸ் அதிகாரி காளிதாஸ்..! சமீப காலமாக செல்போன் உபயோகத்தினால் பல பிரச்சனைகள் உருவெடுக்கிறது. உதாரணமாக சொன்னால், செல்போனால் குடும்பத்திற்குள் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்கிறது. அப்படிப்பட்ட உருவாகும் செல்போன் பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக்கூடிய சைபர் க்ரைம், அதனை தொடர்ந்து நடக்கக்கூடிய தொடர் கொலைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். இப்படத்தின் சிறப்பு காட்சி சில தினங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்தவர்கள் ‘காளிதாஸ்’ திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் படம்மென்றும்,இப்படம் தடம், ராட்சசன், ஜிவி போன்ற படங்களின் வரிசையில் இருக்கும் என தெரிவித்தனர். இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் அவர்கள...
தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!

தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..! தமிழ் சினிமா 100 ஆண்டுகளை தாண்டி தனது சாதனை பயணத்தை தொடர்கிறது. தொழில்நுட்பம் மாற மாற திரைத்துறையில் பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக டிரண்டிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் கூட்டம் பட புரொமோஷன் என்ற பெயரில் உலா வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு படத்தை பற்றிய செய்திகளை முழுமையாக கொடுத்த பத்திரிக்கைகளுக்கு இணையாக இணைய தளங்கள் அதிகரித்தது. இந்த இணைய தளங்கள் மூலம் உலகம் முழுதும் பட செய்திகள் ஒரு நொடியில் பகிரப்பட்டு அது தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியாக பலன் தந்தது. அதன் பின் இப்போது 280 எழுத்துக்களில் படத்தை டிரண்டிங் செய்கிறோம் அதுவும் இந்திய அளவில், உலக அளவில் என ஒரு சில கேப்மாரி புரொமோட்டர்கள் தயாரிப்பாளர்களை ...
மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது! பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது !!

மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது! பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் எனற பிரபல இயக்குனரின் கோரிக்கை நிறைவேறியது ! கடந்த ஆண்டு சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா 87 படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகிலேயே அதிக வயதிலும் தொடர்ந்து நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் என இயக்குனர் விஜய்ஸ்ரீஜி கோரிக்கை விடுத்தார். இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன், இன்றும் தனது 90 வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை விட சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன...
தர்பார்” இசை வெளியீட்டு விழா: தமிழக அரசுக்கு நன்றி சொன்னார் ரஜினி

தர்பார்” இசை வெளியீட்டு விழா: தமிழக அரசுக்கு நன்றி சொன்னார் ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    "தர்பார்" இசை வெளியீட்டு விழா: தமிழக அரசுக்கு நன்றி சொன்னார் ரஜினி ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்”படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்”படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “தர்பார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ரஜினிகாந்த் நடிப்பில் 167-வது படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழக அரசை பல நேரங்களில் விமர்சித்து இருந...
முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ள ‘நான் சிரித்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ள ‘நான் சிரித்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ள 'நான் சிரித்தால்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் 'நான் சிரித்தால்' படத்தில் 'ஹிப் ஹாப்' ஆதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் 'பிரேக் அப் பிரேக் அப் எனக்கு பிரேக் அப் வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள' என்ற பாடலை நாளை (07.12.2019) மாலை 5-7 மணி வரை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வெளியிடவுள்ளார்கள். இப்பாடலை ஆதியே எழுதி இசையமைத்திருக்கிறார். அவரைப் போலவே சுயமான பாடகர்களை அழைத்து பாட வைக்கவுள்ளார்கள். இதுதவிர, ஆதியின் வாழ்க்கையையும் அவர் கடந்த வந்த பாதையையும் கொண்ட காணொளியையும் வெளியிடவுள்ளார்கள். மேலும், சிறந்த சிரிப்புக்கான போட்டியை நடத்துகிறார்கள். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது சிரிப்பை மொபைலில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் 10 பேரின...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தாமல் இருந்த குண்டுகளை அழிக்க பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது அதை சுருட்டிக் கொண்டு குண்டுகளை கடலில் வீசிவிட அதில் ஒரு குண்டு கரை ஒதுங்குகிறது. அதை சாதாரண இரும்பு என்று காயலான் கடையில் போடுகிறார்கள். அங்கிருந்த குண்டு என்ன ஆகிறது கடைசியில் குண்டு வெடித்ததா இல்லையா இதுதான் கதை. காயலான் கடையில் மர்ம பொருள் வெடித்து பலர் பலி என செய்திகள் வருவதற்கு பின் இப்படியும் ஒரு உண்மை இருக்கலாம் என சொல்கிறது இந்த குண்டு. அறிமுக இயக்குனர் அதியன் நல்ல லைன் பிடித்திருக்கிறார். அதை மட்டுமே சரியாக கொண்டு போயிருந்தால் மிகப்பெரிய விஷயத்தை பகிரங்கப்படுத்திய பேர் கிடைத்திருக்கும். அதில் தேவை இல்லாமல் கயல் ஆனந்தியின் காதல் அதை வழக்கம் போல எதிர்க்கும் சாதிய கூட்டம் என அந்த காதல் காட்சிகள் எல்லாம் பரியேரும் பெருமாள் பார்க்...
டாக்டர் படத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன்..!

டாக்டர் படத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரித்து அதன் மூலம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இருவரும் 'ஹீரோ' படத்தில் இணைந்தனர். 'ஹீரோ' வெற்றிக்காக காத்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது வெற்றியை உறுதியாக்கியுள்ளது. 'கோலமாவு கோகிலா' மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. ’டாக்டர்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் 'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். 'டாக்டர்' மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களைக் கவரவுள்ளார். இதில் வினய், யோகி ...
ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி...
வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…

வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    காமெடி படமா.. காம நெடி படமா... வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே... ஆள் உயரத்துக்கு அம்பு இருந்தாலும் வில்லு பல்லு சைஸ்ல இருந்தா வேடிக்கை பாக்கத்தான் தோணும்... வேலைக்காகாதுன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு... அந்த மாதிரி டபுள் மீனிங்ல டயலாக் வைச்சி அரை குறை டிரஸ்ல பொண்ணுங்களை ஆடவிட்டு காமெடியா படமெடுத்துட்டா ஓஹோன்னு ஓடிடும்னு யாரோ ஏத்திவிட அத நம்பி படமெடுத்த கம்பெனி படம் முடிஞ்சி பாத்தா அதுல காமெடிக்கு பதில் காம நெடி அதிகமா இருக்க... அடடா... ஆட்டுவாலு சைஸ்லதான் டபுள் மீனிங் காம நெடி இருக்கும்னு மிச்ச கதையெல்லாம் காமெடியாத்தான் போகும்னு சொல்லித்தான டைரக்டரு சொன்னாரு இப்ப படம் பூரா பச்சையும் நீலமுமா இருக்கேன்னு பதறி போயிட்டாங்க... காமெடிக்குன்னு அழைக்கலனாலும் இப்ப கோலிவுட் கிரக நிலையில காமெடி யோகம் யோகிபாபுகிட்டதான்... அதன...
சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் தமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்... இல்ல... மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க... இடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்... திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படக்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல... இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்க...