ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

திரைப்படங்கள்

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன் இப்படத்தின் படப்பிடிப்பு  15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி –  ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது. அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்  மற்றும் போராட்டக் காட்சிகளை   4காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரை...
முதலமைச்சர் கோப்பையை தட்டிச் சென்ற கென்னடி கிளப் பட கபடி வீராங்கனைகள்..!

முதலமைச்சர் கோப்பையை தட்டிச் சென்ற கென்னடி கிளப் பட கபடி வீராங்கனைகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நிஜவிளையாட்டிலும் 12லட்சம் ரூபாய் தட்டிசென்றனர். படப்பிடிப்பிற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற கபடி வீராங்கனைகள். பெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா,  சசி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு   படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்ந...
அபிசரவணன்-வெண்பா ஜோடியின் மாயநதி

அபிசரவணன்-வெண்பா ஜோடியின் மாயநதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லட்சியத்தை அடைய போராடும் மாயநதி ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்...
சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  அட்டக்கத்தி’ படம் தொடங்கி பல்வேறு படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவர், ஏற்கனவே ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கினார். இப்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் சென்ஸாருக்கு தப்புமா என்பதே இப்போதைய கேள்வி! ஜெயிலுக்குள்ளயே போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும் போது, இவ்வளவு பெரிய சென்னையில் எவ்வளவு போதைப் பொருட்கள் புழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா!? கஞ்சா, ஹெராயின், சரஸ் என்று ஆரம்பித்து சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களே கிடையாது!   போதை பழக்கத்திற்கு ஆளாகும் ஒரு இளம் ஜோடி எவ்வளவு சிக்கலுக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலக வாழ்க்கையை இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் சொல்லாத அளவுக்கு டீடெய்லாக சொல்லியிரு...
ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!

ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அழகிய அசுரா இயக்கத்தில், எஸ்டிஆர் இசையமைப்பில், ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா, அன்சன் பால், தேஜ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘90 எம்எல்’. இப்படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியாகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரைலரில் காட்சிகளிலும், வசனங்களிலும் ஆபாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. https://youtu.be/Jl14barRz84 படத்தின் டிரைலர்தான் அப்படி இருக்கும். ஆனால், படத்தில் அது மாதிரியான காட்சிகளோ, வசனங்களோ இல்லை என படத்தின் இயக்குனர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் தெரிவித்திருந்தார். "அள்ளி குடுத்திருக்கான்... கிள்ளி குடுத்திருக்கான்... புள்ளி தான் வைச்சிருக்கான்" என இரட்டை அர்த்தம் ரொம்பவே பட்டவர்தனமாக வருகிறது ‘18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்’ என டிரைலரின் ஆரம்பத்தில் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற்ற...
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம் கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல... ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்... ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்... பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்... யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு... யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்... எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு... ஆனா ஒரே ஒரு குறை... ஓவர் வாய்ஸ்... நடிப்பு பெருசா வரல... இந்த கு...
‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
‘கண்’ பூரா கண்ணீர்... கலை இல்லை... மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம் யதார்த்த படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் படம்னு போய் ஏமாந்த ஏராளமான நல்ல சினிமா விரும்பிகள் படம் முடிஞ்சி கண்ணு கலங்கி வீங்கி வெறுத்து தெறிக்க வைச்சிருக்கிற படம்தான் கண்ணே கலைமானே... இயற்கை விவசாயம் பத்தி பேசுறேன்னு இருக்குற விவசாயத்தையும் விவசாயிகளுக்கு மறக்கடிக்க இந்த படம் பாத்தா போதும்... கதை ஒண்ணும் புதுசு இல்லை... ரசாயன உரங்களை எதிர்த்து இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் கிராமத்து படித்த இளைஞன் உதயநிதி... அந்த கிராமத்தை சேர்ந்த கிராம வங்கிக்கு அதிகாரியாக வருகிறார் தமன்னா. ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் தமன்னா உதயநிதி விவகாரம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு ஊரில் பெரிய புள்ளியாக இருக்கும் உதயநிதி குடும்பம் பெருசாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இர...
K19 கார்த்தியின் புதுப்படம்..!

K19 கார்த்தியின் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கார்த்தி நடிக்கும் புதிய படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19” என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் 'சிறுத்தை', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர். இப்படத்தை பாக்யராஜ்கண்ணன் இயக்குகிறார். காதல், காமெடி என 'ரெமோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ...
தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ராட்சசன் பட தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். முண்டாசுபட்டி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் அமலாபால், நடிகர் ராதாரவி, ராமதாஸ், நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. புதுமுக இயக்குநரான ரமேஷ் வர்மா ரீமேக் செய்யும் இந்தப் படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக  நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க  அனுபமா  பரமேஸ்வரன்  ஒப்பந்தமாகியுள்ளார்.  பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இ...